Re:... posted byS.K.Salih (Kayalpatnam)[03 June 2016] IP: 180.*.*.* India | Comment Reference Number: 43997
“விழாக்களிலும், நிகழ்ச்சிகளும் காட்டும் அதீத அக்கறையை விட, தேர்ச்சி விகிதம் படுவீழ்ச்சியில் வீழ்ந்துருக்கிறதே என்பதை உணர்ந்து, மேலும் வீழாவண்ணம் தாங்கிப் பிடிப்பதும், அதற்கான வழிமுறைகளைக் கையாள்வதும் தான் தகைமை. கல்விக்கான அமைப்பினை பல்லாண்டுக்கு முன்பே நெறிப்படுத்தி வந்துள்ள நாம் 2016ல் கூட தேர்ச்சி படுவீழ்ச்சியைப் பற்றி அலச வேண்டிய நிலையில் இருக்கிறோம் :-( ” C & P
மேற்கண்டது நண்பர் கத்தீபு அவர்களின் கருத்து. இதற்கு அடியேனின் பணிவான விளக்கம்:-
ப்ளஸ் 2வில் 900 மதிப்பெண்கள் எடுத்தவர்களும், 10ஆம் வகுப்பில் 300 மதிப்பெண்களைப் பெற்றவர்களும் காலரைத் தூக்கிப் பிதற்றிக் கொண்டிருந்த காலகட்டத்தில், தி காயல் ஃபர்ஸ்ட் ட்ரஸ்ட், அதனுடன் இணைந்து (2006ஆம் ஆண்டில் துவக்கப்பட்ட) இக்ராஃ கல்விச் சங்கம், உலக காயல் நல மன்றங்களின் முழு ஒத்துழைப்புகளைப் பெற்று - அன்று முதல் இன்று வரை நடத்திய விழாக்களின் காரணமாக, இன்று 1200க்கு 1160 எடுத்த மாணவ-மாணவியரும், 500க்கு 490 எடுத்த மாணவ-மாணவியரும் தன் மதிப்பெண்கள் குறைந்துவிட்டதாகக் கண்ணீர் வடிப்பதை நேரில் ஆண்டுதோறும் பார்த்து வருகிறேன்.
உயர்மதிப்பெண் பெற்ற மாணவ-மாணவியரையும் கூட இன்னும் பெற்றிருக்கலாமே என்று ஆதங்கப்பட வைத்தது இதுபோன்ற விழாக்கள்தான்!
“நான் கெட்ட கேட்டுக்கு எனக்கு 800 மார்க் போதும்” என்றிருந்த என்னைப் போன்ற கல்வித் தரம் கொண்ட மாணவ-மாணவியரை, “குறைந்தபட்சம் ஒரு 1000 மதிப்பெண்களையாவது பெற்றால், மேடையேறி மெடல் அணியலாம்” என்று சிந்திக்க வைத்ததும் இந்த நிகழ்ச்சிதான்!
“அதெல்லாம் சரிதான்! ஃபெயிலானவங்களுக்கு என்ன செஞ்சீங்க?” என்று கேட்டால், இலங்கை காயல் நல மன்றம் - இக்ராஃ கல்விச் சங்கம் இணைந்து, தேர்ச்சியைத் தவறவிட்ட மாணவர்களுக்கு ரகசியமாக சிறப்பு அழைப்புக் கடிதம் அனுப்பி, அவர்கள் வருட இழப்பின்றி படிப்பைத் தொடர வழிகாட்டவிருந்தனர். எனக்குத் தெரிந்து அந்நேரத்தில் ப்ளஸ்2வில் ஃபெயிலான 18 பேர் அழைக்கப்பட்டிருந்தனர். (அவர்களின் ரகசியங்கள் பாதுகாக்கப்படும் என்ற உறுதிமொழியோடு!) நிகழ்ச்சியில் கலந்துகொண்டதோ வெறும் 3 பேர் மட்டுமே! பார்க்க:-
http://www.kayalpatnam.com/shownews.asp?id=8643
“பெயிலான பிறகு அழைப்பதை விட, ஃபெயிலாகாமல் பாதுகாக்க என்ன முயற்சி எடுக்கப்பட்டது?” என்று கேள்வி எழலாம்.
மாணவ-மாணவியரின் எண்ணவோட்டங்கள், பலவீனங்களை - அவர்களை அன்றாடம் பார்த்து அறிந்துணர்ந்த பள்ளிகளின் தலைமையாசிரியர்களிடம் கேட்டறிந்து, அதற்கேற்ப செயல்திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. பார்க்க:-
http://www.kayalpatnam.com/shownews.asp?id=17112
“விழாக்களிலும், நிகழ்ச்சிகளும் காட்டும் அதீத அக்கறையை விட”
என்ற வாசகம் என்னைப் பெரிதும் பாதித்ததாலேயே இவ்வளவு விளக்கம் கூற வேண்டியதாயிற்று!
நண்பர் என்னைத் தவறாக எடுத்துக்கொள்ள வேண்டாம் என்றும், மாற்றுக் கருத்து இருப்பின் தெரிவிக்குமாறும் வேண்டிக் கொள்கிறேன். நன்றி!!!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross