செய்தி: தூக்கி நிறுத்திய முஹ்யித்தீன் மெட்ரிக் பள்ளி, வாழ வைத்த எல்.கே.மேனிலைப்பள்ளி நிர்வாகங்களுக்கு நன்றி! பணி நிறைவில் விடைபெற்றுச் செல்லும் எல்.கே.பள்ளி ஆசிரியர் அப்துர்ரஊஃப் உருக்க உரை!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...கண்கள் பனித்தது இதயம் இனித்தது posted bymackie noohuthambi (kayalpatnam )[05 June 2016] IP: 163.*.*.* Japan | Comment Reference Number: 44004
முஹம்மது அப்துல் ரவூப் ஆசிரியர் அவர்களிடம் கணிதம் கற்கும் மாணவனாக நான் இருந்திருக்க வேண்டாமா என்ற ஒரு உந்துதலை ஏற்படுத்தும் அளவுக்கு இங்கே அவரது பிரியாவிடை நிகழ்ச்சி எழுச்சியுடனும் நெகிழ்ச்சியுடனும் நடைபெற்றிருக்கிறது.
பெற்றோர் மாணவர் அவைத்தலைவர் முஸ்தபா அவர்களின் மகனார் எனது மருமகனார் ஊர் வந்தபோது ரவூப் சார் அவர்களிடம் பாடம் கற்றிருக்கிரீர்களா என்று கேட்டேன். என்ன அப்படி கேட்டு விட்டீர்கள். ஒரு DEDICATED TEACHER என்று நான் அடையாளம் கட்டவேண்டுமானால் அவரைத்தான் சொல்வேன் என்றார்.
எனது கண்கள் பனித்தது இதயம் இனித்தது. அப்படிப் பட்டவரை நான் சந்திக்க வேண்டுமே என்றேன் இன்ஷா அல்லாஹ் இன்று நாளை அவரை சந்தித்து நல்லாசி பெற இருக்கிறேன்.
அவர்களுக்கு நோய் ஏற்பட்டபோது அமெரிக்காவில் இருந்து ஒரு மாணவர் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு அவருக்கு வேண்டிய சிக்கிச்சை செலவை தானே ஏற்றுக் கொள்வதாக ஆசிரியப் பெருந்தகை நன்றியுடன் இந்த நேரத்தில் அவரைப் பற்றி நினைவு கூர்ந்து பேசியிருக்கிறார். ஆசிரியர் மாணவர் உறவு எவ்வளவு உறுதியாக பிணைக்கப் பட்டிருக்கிறது என்பதை உணர முடிகிறது.
ஏணியும் தோணியும் பிறர் கரை சேர பயன்படுகிறது. அதன் பிறகு ஏணி சுவரிலே சாய்ந்து பின்னர் சரிந்து கிடக்கிறது. தோணி கரையிலே ஒதுங்கி தன்னை நீரிலிருந்து காத்துக் கொள்ள தள்ளாடிக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில்தான் ஆசிரியர்கள் வாழ்வு இருக்கிறது. எல்லோரும் இந்த நிகழ்ச்சியை இந்த இணையத்தளம் மூலம் அறிந்திருப்பார்கள்.
ஹாமிதிய்யா மார்க்கக் கல்வி நிறுவனத்தில் இறை மறை செல்வர்களுக்கு பட்டயம் அளித்து கௌரவித்தபோது அங்கே ஒரு செய்தியை சொன்னார்கள்.
சுலைமான் என்ற ஒரு சிறுவனுக்கு சுற்றுலா செல்வதற்கு ஒரு ரியால் பணம் கொடுக்க முடியாத வறுமை நிலை. அவனுடைய ஆசிரியர் மாணவர்களிடையே ஒரு போட்டி வைத்து போட்டியில் வென்றவர்களுக்கு ஒரு ரியால் பரிசளிப்பதாக சொன்னார். சுலைமான் வென்றான். ஒரு ரியால் பரிசையும் பெற்று அதை ஆசிரியரிடமே கொடுத்து மற்ற மாணவர்களுடன் சுற்றுலா சென்று சந்தோசமாக வீடு திரும்பினான்.
50 ஆண்டுகள் கழிந்தன. சுலைமான் இப்போது ஒரு கோடீஸ்வரன். அல் ராஜி வங்கியின் அதிபர். அவர் தன் ஆசிரியரை தேடுகிறார் கண்டு பிடிக்கிறார். ஒட்டிய வயிறும் உலர்ந்த நாவுமாக வறுமைக் கோட்டில் இருக்கும் ஆசிரியருக்கு சுலைமான் தன்னை அறிமுகப் படுத்தி எல்லா மரியாதைகளையும் செய்து ஒரு அறிவிப்பு வெளியிடுகிறார்.
''நீங்கள் வாழும் காலமெல்லாம் உங்களுக்கு உணவு உடை இருக்க இடம் எல்லாம் நானே தருகிறேன். சந்தோசமாக இருங்கள்'' என்று சொல்லி அனுப்புகிறார்.சிந்திக்க வேண்டிய செய்தி.
ஆசிரியர்களை கண்ணியப் படுத்துவோம்.
நாம் கற்ற பள்ளியை கண்ணியப் படுத்துவோம். மதிப்பெண்கள் அதிகம் பெற்று அவர்கள் மனம் குளிர செய்வோம்.
I SALUTE ,YOU , RAWOOF SIR ,YOU ARE REALLY GREAT .
இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்
இவர்போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும்,
புரியாத பிரியம் பிரியும்போது புரியும்
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross