ரமலான் முபாரக்! posted byமுஹம்மது ஆதம் சுல்தான் (yanbu)[06 June 2016] IP: 128.*.*.* Romania | Comment Reference Number: 44008
இன்று புனித ரமலானை ஆரபித்த அத்துனை உள்ளங்களுக்கும் ஆதம் சுல்தானின் அன்பொழுகும் ரமலான் நல் வாழ்த்துக்கள்!
அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்தை பொறுத்தவரை சவூதியில் என்ன நிலைப்பாடோ,சவூதியில் என்ன அறிவிக்கிறார்களோ அந்த உத்தரவின்படிதான் செயல்படும் என்கின்ற கருத்துக்கள் பலமாக பரவி வந்தது பலரும் அறிந்த ஒன்றாகும்!
ஆனால் அந்த நிர்வாகமோ உலகில் எங்கு பிறை பார்த்தாலும் அதை ஏற்று அதன்படி அமல்கள் நிர்வாகத்தால் ஆரம்பித்து செயல்படுத்தப்படும் என்ற கொள்கையில் இருக்கிறோம்,
என்று கூறுவதையும் பரவலாக கேட்டிருக்கிறோம்!
நேற்றய நிலைப்பாடானது சவூதி நேரம் மாலை 5 மணியாக இருக்கும் போதே அல்ஜாமிஉல் அஸ்ஹரரில் இன்று தலை நோன்பு என்ற அறிவித்தல் வெளியாகி விட்டது!
ஆக ஒரு நிர்வாகத்தின் முழு விபரத்தையும் சந்தேகமற தெளிவாக தெரிந்த பின்னரே,அந்த நிர்வாகத்தப்பற்றிய கருத்துப்பதிவையோ,விமர்சனத்தையோ கூறுவோமேயானால், அதுவே ஒரு நடுநிலை கருத்து பரிமாற்றமாக மாறுவதோடு மட்டுமல்லாமல் மன நெருடலையோ, மனகசப்பையோ மறைத்திட்டு ஒற்றுமை உணர்வுகள் ஊடுருவிக்கொண்டேதான் இருக்கிறது என்பதை எந்த ஒரு நடு நிலையானவர் களிடமிருந்தும், நாளைய ஒற்றுமை விரும்பிகளிடமிருந்தும் நாம் பெறலாம்! அவர்கள் இறை நிலைப்பாட்டு கொள்கையில் எதிர் நிலைப்பாட்டிலிருந்தாலும் கூட!
எல்லாம் வல்ல அல்லாஹ் இந்த புனித நோன்பின் பொருட்டால் நம் அனைவர்களின் அமல்களையும் ஏற்றுக்கொண்டு அதன்பொருட்டால் அதிகதிக நன்மைகளையும் உடல் நலத்தையும் தந்தருள்வானாக் ஆமீன்! அல்லாஹ் அனைத்தும் அறிந்தவன்!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross