ஜூன் 06ஆம் நாள் திங்கட்ழமையன்று (நாளை) ரமழான் முதல் நாள் என காயல்பட்டினம் அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜித் அறிவித்துள்ளது.
அப்பள்ளியின் கத்தீப் மவ்லவீ எம்.ஐ.அப்துல் மஜீத் மஹ்ழரீ - இன்று இஷா தொழுகைக்குப் பின் பேசுகையில்,
கேரள மாநிலம் காப்பாடு என்ற ஊரில் ரமழான் தலைப்பிறை காணப்பட்ட தகவல் பெறப்பட்டதை அடிப்படையாகக் கொண்டு, இன்று ரமழான் இரவு என்றும், நாளை 06.06.2016. திங்கட்கிழமை ரமழான் முதல் நாள் என்றும் அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜித் நிர்வாகத்தால் அறிவிக்கப்படுவதாகவும் அவர் அறிவித்தார்.
இந்த அறிவிப்பின் படி, அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜித் ஜமாஅத்தினர் நாளை ரமழான் முதல் நோன்பு நோற்கவுள்ளனர். இன்று இரவுத் தொழுகை 21.00 மணிக்கு நடைபெறவுள்ளது.
நாளை முதல் இஷா தொழுகை 20.30 மணிக்கும், இரவுத் தொழுகை 20.45 மணிக்கும் துவங்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
M.A.அப்துல் ஜப்பார்
கடந்தாண்டு (ஹிஜ்ரீ 1436) அல்ஜாமிஉல் அஸ்ஹரின் ரமழான் தலைப்பிறை அறிவிப்பு குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜித் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |