ஆண்டுதோறும் ரமழான் தலைப்பிறை, நோன்புப் பெருநாள் உள்ளிட்ட பிறை தொடர்பான அறிவிப்புகளை வெளியிடுவதற்காக, காயல்பட்டினம் மஹ்ழரா அரபிக் கல்லூரி, ஜாவியா அரபிக் கல்லூரி ஆகியவற்றினதும், நகர உலமாக்களினதும் கூட்டுக் கூட்டம், ஓராண்டு மஹ்ழராவிலும், அடுத்த ஆண்டு ஜாவியாவிலும் நடைபெறுவது வழமை.
அதன் படி, நிகழும் ஹிஜ்ரீ 1437ஆம் ஆண்டு ரமழான் தலைப்பிறை குறித்த தகவல்களைப் பெற்று அறிவிப்பை வெளியிடுவதற்காக, காயல்பட்டினம் மஹ்ழரா அரபிக் கல்லூரி, ஜாவியா அரபிக் கல்லூரி & காயல்பட்டினம் நகர உலமாக்களின் கூட்டுக் கூட்டம், மஹ்ழரா அரபிக் கல்லூரி வளாகத்தில், நாளை (06.06.2016. திங்கட்கிழமை பின்னேரம் செவ்வாய் இரவு) மஃரிப் தொழுகைக்குப் பின் நடைபெறவுள்ளதாகவும், நகர உலமாக்கள் அனைவரும் குறித்த நேரத்தில் தவறாமல் கலந்துகொள்ளுமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்தாண்டு (ஹிஜ்ரீ 1436) ரமழான் தலைப்பிறை அறிவிப்பிற்கான உலமாக்கள் கூட்டுக் கூட்டம் குறித்த அழைப்புச் செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
கடந்தாண்டு (ஹிஜ்ரீ 1436) நடைபெற்ற - ரமழான் தலைப்பிறை அறிவிப்பிற்கான உலமாக்கள் கூட்டுக் கூட்டம் குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
மஹ்ழரா செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
|