எதிர்வரும் ரமழான் - நோன்பு மாதத்தை முன்னிட்டு, சிங்கப்பூர் காயல் நல மன்றம் சார்பில், காயல்பட்டினத்திலுள்ள ஏழை-எளிய 130 குடும்பங்களுக்கு, தலா ரூபாய் 2 ஆயிரத்து 765 மதிப்பில், மொத்தம் ரூபாய் 3 லட்சத்து 59 ஆயிரத்து 450 ரூபாய் செலவில் - 34 வகையான அத்தியாவசிய சமையல் பொருட்கள், உதவியாக வழங்கப்பட்டுள்ளன.
சிங்கப்பூர் காயல் நல மன்ற பிரதிநிதி கே.எம்.டி.ஸுலைமான், சமூக ஆர்வலர்களான கே.எம்.என்.மஹ்மூத் லெப்பை, கே.எம்.என்.முஹம்மத் உமர் ஆகியோரிணைந்து அப்பொருட்களை - 05.06.2016. ஞாயிற்றுக்கிழமையன்று பயனாளிகளின் இல்லங்களுக்குத் தேடிச் சென்று வழங்கியுள்ளனர்.
தகவல்:
K.M.N.மஹ்மூத் லெப்பை
சிங்கப்பூர் காயல் நல மன்றம் சார்பில் இதற்கு முன் அத்தியவாசிய சமையல் பொருட்கள் வினியோகிக்கப்பட்ட செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
சிங்கப்பூர் காயல் நல மன்றம் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
|