அண்டை நாடான இலங்கையில், அண்மையில் பெய்த கனமழை காரணமாக பெரும் வெள்ளப்பெருக்கும், நிலச்சரிவும் ஏற்பட்டது. இதில், சுமார் 10 மாவட்டங்களின் 30 ஆயிரம் குடும்பங்களைச் சேர்ந்த 1 இலட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகவும் இலங்கை பேரிடர் மேலாண்மை நிலையம் தெரிவித்துள்ளது.
பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணம் உதவிடும் வகையில், சோஷியல் டெமாக்ரட்டிக் பார்ட்டி ஆஃப் இந்திய (SDPI) கட்சியின் தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் சார்பில் பொதுமக்களிடம் நிதி சேகரிக்கப்பட்டு வருகிறது.
காயல்பட்டினம் பேருந்து நிலையம், அஞ்சல் அலுவலகம் அருகில், கடற்கரை ஆகிய இடங்களில் நேற்று 04.06.2016. சனிக்கிழமை பொதுமக்களிடம் நிதி சேகரிக்கப்பட்டது.
இத்தகவலை, SDPI தூத்துக்குடி மாவட்ட பொதுச் செயலாளர் எச்.ஷம்சுத்தீன் தெரிவித்துள்ளார்.
SDPI / PFI தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
|