சஊதி அரபிய்யா - ரியாத் காயல் நல மன்றத்தின் செயற்குழுக் கூட்டத்தில், நகர்நலப் பணிகளுக்காக 3 லட்சத்து 88 ஆயிரம் ரூபாய் நிதியொதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து, அவ்வமைப்பின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள நிகழ்வறிக்கை:-
ரியாத் காயல் நல மன்றத்தின் 54-வது செயற்குழு கூட்டம் கடந்த வெள்ளியன்று (13-MAY) துணைச் செயலாளர் நோனா செய்யித் இஸ்மாயில் அவர்களது இல்லத்தில் சிறப்பாக நடைபெற்றது.
ஆரம்பமாக இந்நிகழ்ச்சி ஒருங்கினைப்பாளர்களின் அனுசரனையில் விருந்துபச்சாரம் பரிமாறப்பட்டது. அதனைத் தொடர்ந்து நிகழ்ச்சி நிரலை இஸ்மத் நொஃபல் நெறிப்படுத்த பின்னர் இறைமறை ஓதி செய்யித் இஸ்மாயில் அவர்கள் துவக்கி வைக்க, தொடர்ச்சியாக அபூபக்கர் ஆதில் அவர்கள் அனைவரையும் வரவேற்றார்.
பின்னர் இக்கூட்டத்திற்கு தலைமை பொறுப்பேற்று நடத்திய SB. முகம்மத் மொகைதீன் அவர்கள் தனதுரையில் நம்மன்றம் ஒவ்வொரு செயற்குழு கூட்டத்திலும் மிக அருமையாக அனைத்து உறுப்பினர்களின் பங்களிப்போடு நடந்ததை சுட்டிக்காட்டி இக்கூட்டத்திலும் அதே பங்களிப்பை எதிர்நோக்குவதாக தெரிவித்தார்.
மன்ற நல உதவிகள்:
அடுத்து ஷிபா மூலம் பெறப்பட்ட மருத்துவ கடிதங்கள் மற்றும் நேரடியாக பெறப்பட்ட கல்வி/சிறுதொழில் விண்ணப்பங்களை வாசித்து மொத்தமாக ரூபாய் 3,88,000 (மூன்று இலட்சத்து எண்பத்தெட்டாயிரம்) வழங்கப்பட்டது.
மருத்துவம்: 1,66,000
சிறுதொழில்: 56,500
கல்வி: 60,500
மற்றவை: 1,05,000
இமாம் மற்றும் முஅத்தீன் ஊக்கத்தொகையாக இவ்வருடம் ரூ. 30,000/ ஒதுக்கீடு செய்யப்பட்டது.
ரமலான் உணவுப்பொருட்கள் திட்டம்:
பின்னர் கடந்த 4 வருடங்களாக சிறப்புற செயல்படுத்தி வரும் ரமலான் மாத உணவுப்பொருட்கள் வழங்கும் திட்டத்தை இவ்வருடமும் செயல்படுத்த கடந்த செயற்குழுவில் ஒப்புதல் பெறப்பட்டதால் இவ்வருடம் 177 பயனீட்டாளரக்கு உணவு வழங்க திட்டமிட்டுள்ளதாக செய்யித் இஸ்மாயில் தெரிவித்தார்.
அடுத்த பொதுக்குழு கூட்டம்:
இன்ஷா அல்லாஹ் எம்மன்றத்தின் 52-வது பொதுக்குழு கூட்டம் ஜூன் மாதம் 24-ம் தேதி (ரமலான் மாதம்) இப்தார் நிகழ்ச்சியோடு Classic Party Hall, Batha-வில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.
நிதி நிலை அறிக்கை:
அடுத்து மன்ற பொருளாளர் வாவு கிதுர் முகம்மத் அவர்கள் இவ்வருடம் முதல் இது நாள் வரை செய்துள்ள மற்றும் வழங்க இருக்கின்ற தொகை போக மீதமுள்ள இருப்புத்தொகையை தெளிவாக சமர்ப்பித்தார்.
பார்வையாளர்கள் கருத்து:
இக்கூட்டத்தின் பார்வையாளர்களாக பொதுக்குழு உறுப்பினர்கள் சகோதரர்கள் VMT. அப்துல்லாஹ், யாஸிர் தாஜுத்தீன், ஸுஃபி மற்றும் முத்து மொஹ்தூம் ஆகியோர்கள் கலந்து கொண்டு தங்களுடைய கருத்துக்களையும் மேலான ஆலோசனைகளையும் பகிர்ந்துக் கொண்டார்கள்.
கூட்ட அமைப்பாளர்கள்:
54-வது செயற்குழுவின் ஒருங்கிணைப்பாளர்கலான ஹசன், நோனா இஸ்மாயில், மற்றும் SB. முகம்மத் மொகைதீன் அவர்களின் அணுசரணையில் காயல் களரியுடன் விருந்துபச்சாரம் அளிக்கப்பட்டது.
இறுதியாக சுலைமான் சஃபீக் அவர்கள் நன்றி நவில ஹாபிழ் செய்ஹு தாவூத் இத்ரீஸ் அவர்கள் துஆ ஓத, குழுப்படம் எடுத்த பின்னர் கூட்டம் சிறப்பாக முடிவுற்றது. அல்ஹம்ந்துலில்லாஹ். வஸ்ஸலாம்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரியாத் கா.ந.மன்றம் சார்பாக...
தகவல் & படங்கள்:
N.M.செய்யித் இஸ்மாஈல்
(செய்தி தொடர்பாளர்)
ரியாத் காயல் நல மன்றத்தின் முந்தைய (53ஆவது) செயற்குழுக் கூட்டம் குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
ரியாத் கா.ந.மன்றம் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
|