காயல்பட்டினம் சமூக நல்லிணக்க மையம் - தஃவா சென்டர் நிறுவனத்திற்கு, அலியார் தெருவில் புதிய கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இதன் கட்டுமானப் பணிகளில் தம்மை ஈடுபடுத்திக்கொண்ட முஸ்லிமல்லாத மக்களுக்கு அந்நிறுவனத்தால் விருந்துபசரிப்பு செய்து, அழைப்புப் பணியும் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து, தஃவா சென்டர் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை:-
அஸ்ஸலாமு அலைக்கும் .......
நமது காயல்பட்டணம் தஃவா சென்டரின் முதல் மடியின் கட்டுமானப்பணிகள் சிறப்பாக நடந்து முடிந்துள்ள்ளது. அல்ஹம்துலில்லாஹ்.
இக்கட்டிடபணிகள் சிறப்பாக நடந்திட உடல் உழைப்பாலும், மற்ற இடங்களில் வாங்கும் ஊதியத்தை விட குறைந்த ஊதியத்திர்க்கும் வேளை பார்த்து நமது தஃவா சென்டரை சிறந்த முறையில் கட்டிமுடிக்க உறுதுணையாக பணியாற்றிய கட்டிட பணிகள் சார்ந்த பணியார்களை கவுரவிக்கும் வண்ணம் கடந்த 15.05.2016 ஞாயிறன்று காலை 11.30 மணியளவில் சிறப்பு விருந்தும் ஏற்பாடு செய்யப்பட்டது.
கொத்தனார் சித்தாள்கள் டீம், சென்ட்ரிங் டீம், எலக்ட்ரீசியன் டீம், பிளம்பர் டீம், டைல்ஸ் மார்ப்ள்ஸ் ஒட்டுனர்கள் டீம், தச்சுவேலை தொழிலாளர்கள் டீம், பெயின்டர்கள் டீம் ஆக 50 சகோதர சகோதரிகளை அழைத்து தஃவாவும் விருந்தும் ஏற்பாடு செய்யப்பட்டது.
இதில் சிறப்பு விருந்தினர்களாக சகோ.ஷமீமுல் இஸ்லாமும் மற்றும் சகோ.நவாஸ் காக்கா ஆகியோர் கலந்து கொண்டு இஸ்லாமிய அழைக்கும்பணியை நமது தொப்புள் கொடி உறவுகளிடம் செய்தார்கள். மேலும் விருமிய சகோதர சகோதரிகளுக்கு தமிழாக்க திருக்குர்ஆன் மற்றும் அழைக்கும்பணி சார்ந்த புத்தகங்கள், CDகள் தரப்பட்டது.
இறுதியாக விருந்து உபசரிப்புடன் இனிதே நிகழ்ச்சி முடிவடைந்தது. அல்ஹம்துலில்லாஹ்
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தஃவா சென்டர் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |