காயல்பட்டினம் நகராட்சி எல்லைக்குள் இயங்கி வரும் DCW தொழிற்சாலையின் சார்பில், காயல்பட்டினத்தில் நடத்தப்பட்ட தையல் & எம்ப்ராய்டரிங் பயிற்சியை நிறைவு செய்த மகளிருக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இதுகுறித்து, DCW மக்கள் தொடர்புத் துறை துணை மேலாளர் சித்திரை வேல் வெளியிட்டுள்ள செய்தியறிக்கை:-
டி.சி.டபிள்யூ நிறுவனம் சார்பில் கடந்த வருடம் டிசம்பர் 1ம் தேதி காயல்பட்டணத்தில் உள்ள பெண்களுக்கு ஆறு மாத கால இலவச தையல் மற்றும் எம்ப்ராய்டிங் பயிற்சி துவங்கப்பட்டது. இப்பயிற்சியின் நிறைவு விழா இன்று (04.06.2016) டி.சி.டபிள்யூ நிறுவன வளாகத்தில் நடைபெற்றது.
நிறுவனத்தின் மக்கள் தொடர்பு துறை துணைமேலாளர் சித்திரைவேல் வரவேற்று பேசினார். மத்திய அரசின் சிறு குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் தூத்துக்குடி மாவட்ட உதவி இயக்குநர் ஜொpனா பபி தலைமை தாங்கி இலவச தையல் மற்றும் எம்ப்ராய்டரிங் பயிற்சி பெற்ற 41 பெண்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் தையல் உபகரணங்கள் வழங்கி பாராட்டினார்கள்.
நிகழ்ச்சியில் நிறுவனத்தின் செயல் உதவித்தலைவர்கள் மே.சி.மேகநாதன் (நிர்வாகம்), ஆர்.ஜெயக்குமார் (பணியகம்), சுபாஷ் டாண்டன் (காஸ்டிக் சோடா), மதர் சமூக சேவை நிறுவனத்தின் இயக்குநர் கென்னடி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். மக்கள் தொடர்பு துறை அதிகாரி பினோ நன்றி கூறினார். நிகழ்ச்சிகளை சீனியர் ஆபீசர் பிரகாஷ் தொகுத்து வழங்கினார்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மக்கள் தொடர்பு துறையைச் சேர்ந்த ஆறுமுகம் மற்றும் பினோ செய்திருந்தனர்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
DCW ஆலையின் நலத்திட்ட உதவிகள் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
|