நகரில் பரவலாகப் பிறை காணப்பட்டதால் இன்று ரமழான் இரவு என்றும், ஜூன் 07 செவ்வாய்க்கிழமை (நாளை) முதல் நோன்பு என்றும் - மஹ்ழரா, ஜாவியா, நகர உலமாக்கள் கூட்டுக் கூட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. விரிவான விபரம் வருமாறு:-
ஹிஜ்ரீ 1437 ரமழான் தலைப்பிறை> குறித்து முடிவு அறிவிப்பதற்கான - காயல்பட்டினம் மஹ்ழரா - ஜாவியா உலமாக்கள் கூட்டுக் கூட்டம், மஹ்ழரா அரபிக்கல்லூரி வளாகத்தில் இன்று (ஜூன் 06 திங்கட்கிழமை) மஃரிப் தொழுகைக்குப் பின், 18.50 மணியளவில், மவ்லவீ ஏ.கே.அபூமன்ஸூர் மஹ்ழரீ தலைமையில் நடைபெற்றது.
காயல்பட்டினத்தில் இன்று அனைவராலும் ரமழான் தலைப்பிறை தெளிவாகக் காணப்பட்டதையடுத்து, இன்று ரமழான் இரவு என்றும், ஜூன் 07 செவ்வாய்க்கிழமையன்று (நாளை) ரமழான் முதல் நோன்பு என்றும் அக்கூட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஹிஜ்ரீ 1437 ரமழான் தலைப்பிறை தொடர்பான அறிவிப்பும், கூட்டத்தில் கலந்துகொண்ட மார்க்க அறிஞர்களின் கைச்சான்றுப் பதிவுகளும் வருமாறு:-
காயல்பட்டினம் மகுதூம் ஜும்ஆ பள்ளியின் கத்தீப், ஜாவியா அரபிக் கல்லூரி, அரூஸுல் ஜன்னஹ் மகளிர் அரபிக் கல்லூரி ஆகியவற்றின் துணை முதல்வர் மவ்லவீ ஹாஃபிழ் எஸ்.கே.எம்.காஜா முஹ்யித்தீன் காஷிஃபீ துஆவைத் தொடர்ந்து, ஸலவாத்துடன் கூட்டம் நிறைவுற்றது. இக்கூட்டத்தில், மஹ்ழரா அரபிக் கல்லூரி, ஜாவியா அரபிக் கல்லூரி மற்றும் காயல்பட்டினம் நகரின் உலமாக்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.
கடந்தாண்டு (ஹிஜ்ரீ 1436) ரமழான் தலைப்பிறை தொடர்பாக மஹ்ழராவில் நடைபெற்ற கலந்தாலோசனைக் கூட்டம் குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
மஹ்ழரா தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
|