காயல்பட்டினம் தைக்கா தெரு நடுப்பகுதியில் அமைந்திருக்கும் புதுப்பள்ளி, புறவழிச்சாலையின் தென்துவக்கத்தில் அமைந்திருக்கும் ஷெய்கு ஸலாஹுத்தீன் பள்ளி என்ற மேலப்பள்ளியில் ஆண்டுதோறும் ரமழான் மாதத்தில் இஃப்தார் - நோன்பு துறப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.
இஃப்தார் - நோன்பு துறப்பு நிகழ்ச்சியின்போது, புதுப்பள்ளியில் நாள்தோறும் 30 முதல் 50 பேர் வரையும், மேலப்பள்ளியில் 15 முதல் 25 பேர் வரையும் கலந்துகொள்கின்றனர். அவர்களுக்கு, பேரீத்தம்பழம், தண்ணீர், கஞ்சி, வடை உள்ளிட்டவை பரிமாறப்படுகிறது.
புதுப்பள்ளியில், நாள்தோறும் மாலையில் வீடுகளுக்காக வினியோகிக்கப்படும் ஊற்றுக் கஞ்சியை, இப்பள்ளிகளின் மஹல்லா ஜமாஅத்தைச் சேர்ந்தோர் உட்பட சுமார் 200 குடும்பத்தினர் பெற்றுச் செல்கின்றனர். மேலப்பள்ளியின் ஊற்றுக் கஞ்சியை சுமார் 150 குடும்பத்தினர் பெற்றுச் செல்கின்றனர்.
நகரின் பள்ளிவாசல்களில் பெரும்பாலும் கறிகஞ்சி தயாரிக்கப்படும் இக்காலத்தில், புதுப்பள்ளியில் மட்டும் பெரும்பாலும் வெண்கஞ்சி தயாரிக்கப்படுவதும், மஹல்லா ஜமாஅத்தைச் சேர்ந்தோர் வெண்கஞ்சி மீது அதிக விருப்பம் கொண்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
புதுப்பள்ளி, மேலப்பள்ளி இரண்டையும் புதுப்பள்ளி நிர்வாகமே நிர்வகித்து வருகிறது. தலைவராக எஸ்.எம்.உஸைர், துணைத்தலைவர்களாக கத்தீபு எம்.என்.ஷெய்கு ஸலாஹுத்தீன், எஸ்.எஸ்.எம்.புகாரீ, செயலாளராக ஏ.எஸ்.அஷ்ரஃப், துணைச் செயலாளர்களாக பாளையம் எம்.எஸ்.அமீர் அப்துல்லாஹ், பல்லாக் அப்துல் காதிர் நெய்னா, இணைப் பொருளாளர்களாக எஸ்.எம்.பி.செய்யித் உமர் (அ.பு.), எம்.எல்.ஹாரூன் ரஷீத் ஆகியோர் நிர்வாகிகளாக இருந்து சேவையாற்றி வருகின்றனர்.
எஸ்.ஏ.அஹ்மத் முஸ்தஃபா, பீ.எஸ்.எம்.இல்யாஸ், எம்.ஓ.செய்யித் அஹ்மத், கலகலா எஸ்.செய்யித் இப்றாஹீம், எஸ்.ஏ.சாமு ஷிஹாபுத்தீன், ஜெ.ஏ.லரீஃப், பீ.எம்.ஏ.ஸதக்கத்துல்லாஹ், எச்.எம்.ஷேக், ஐ.கே.ஷாஜஹான், பீ.ஏ.கே.சுலைமான், ஜெ.எம்.அப்துர்ரஹீம் காதிரீ, ஏ.ஏ.முஹம்மத் அலீ ஸாஹிப் ஆகிய 12 பேர் செயற்குழு உறுப்பினர்களாகவும் சேவையாற்றி வருகின்றனர்.
புதுப்பள்ளியில் அன்றாடம் ஐவேளைத் தொழுகைக்கான இமாமாக காயல்பட்டினம் சொளுக்கார் தெருவைச் சேர்ந்த மவ்லவீ காலித் இப்றாஹீம் பணியாற்றி வருகிறார். முஅத்தினாக பண்ணை ஏ.எம்.முஹம்மத் காஸிம் பணியாற்றுகிறார்.
இப்பள்ளியில் ரமழான் தராவீஹ் சிறப்புத் தொழுகையில் முழு குர்ஆனும் ஓதி முடிக்கப்படுகிறது. காயல்பட்டினம் மரைக்கார் பள்ளித் தெருவைச் சேர்ந்த ஆசிரியர் காதிர் ஸாஹிப் உடைய மகன் ஹாஃபிழ் உமர் ஃபாரூக் ரிஸ்வீ நடப்பாண்டு தொழுகையை பொறுப்பேற்று வழிநடத்தி வருகிறார்.
மேலப்பள்ளியில், காயல்பட்டினத்தைச் சேர்ந்த மவ்லவீ எம்.டீ.ஷெய்க் அப்துல் காதிர் ஸூஃபீ ஜமாலீ - இமாமாகவும், முஅத்தினாகவும் பணியாற்றி வருகிறார். நடப்பாண்டு ரமழான் தராவீஹ் தொழுகையையும் இவரே வழிநடத்தி வருகிறார். திருமறை குர்ஆனின் சிறிய அத்தியாயங்கள் தராவீஹ் தொழுகையில் ஓதப்படுகிறது.
புதுப்பள்ளி, மேலப்பள்ளி ஆகிய இரு பள்ளிவாசல்களுக்கும் ரமழான் கஞ்சி ஏற்பாட்டுக் குழுவும் ஒரே நிர்வாகமாகவே அமைக்கப்பட்டுள்ளது. எம்.என்.ஸதக்கத்துல்லாஹ் தலைமையில், பீ.எம்.ஏ.ஸதக்கத்துல்லாஹ், ஏ.எஸ்.அஷ்ரஃப், எம்.எஸ்.ஸதக்கத்துல்லாஹ், ஹஸன், செய்யித் அஹ்மத், நாஸர் உள்ளிட்டோர் கஞ்சி தயாரிப்புக் குழுவினராக உள்ளனர்.
புதுப்பள்ளி, தரைமட்டத்தில் மிகவும் தாழ்ந்த நிலையில் இருப்பதால் மழைக்காலங்களில் தேங்கும் மழை நீர் பள்ளிக்குள்ளும் தேங்கி, தொழ வழியற்ற நிலை ஏற்படுவது வாடிக்கை. இதனைக் கருத்திற்கொண்டும், தொழுகையாளிகள் வரவுக்கேற்ப பள்ளியில் போதிய இடவசதி இல்லாமையைக் கருத்திற்கொண்டும், இப்பள்ளியை இடித்து, சுமார் 1 கோடியே 60 லட்சம் ரூபாய் செலவில் புதுப்பித்துக் கட்ட தீர்மானிக்கப்பட்டு, அண்மையில் அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. [அடிக்கல் நாட்டப்பட்ட செய்தி தனியாக வெளியிடப்படும்.]
புதுப்பள்ளியில் நடப்பாண்டில், இன்று (ஜூன் 07) பதிவு செய்யப்பட்ட இஃப்தார் - நோன்பு துறப்பு காட்சிகள் வருமாறு:-
மேலப்பள்ளியில் நடப்பாண்டில், இன்று (ஜூன் 07) பதிவு செய்யப்பட்ட இஃப்தார் - நோன்பு துறப்பு காட்சிகள் வருமாறு:-
தகவல் உதவி:
M.L.ஹாரூன் ரஷீத் & P.M.A.ஸதக்கத்துல்லாஹ்
புதுப்பள்ளியில் கடந்தாண்டு (ஹிஜ்ரீ 1436) நடைபெற்ற இஃப்தார் - நோன்பு துறப்பு நிகழ்ச்சி குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
புதுப்பள்ளியின் வரலாற்றுத் தகவல்கள் உள்ளிட்ட விபரங்களடங்கிய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
புதுப்பள்ளி தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
மேலப்பள்ளியில் கடந்தாண்டு (ஹிஜ்ரீ 1436) நடைபெற்ற இஃப்தார் - நோன்பு துறப்பு நிகழ்ச்சி குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
மேலப்பள்ளியின் வரலாற்றுத் தகவல்கள் உள்ளிட்ட விபரங்களடங்கிய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
மேலப்பள்ளி தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
நடப்பாண்டு இஃப்தார் நிகழ்ச்சிகள் குறித்த முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
|