தூத்துக்குடி - திருச்செந்தூர் நெடுஞ்சாலையில், காயல்பட்டினம் லோக்கல் ஃபண்ட் ரோட் எனப்படும் எல்.எஃப். வீதியில், பேருந்து நிலையத்தின் எதிரில், புகழ்பெற்ற கால்பந்து விளையாட்டு மைதானமான ஐக்கிய விளையாட்டு சங்கத்தையொட்டி அதன் மேற்புறத்தில் அமைந்துள்ளது மஸ்ஜித் அஷ்ஷெய்க் ஹுஸைன் என்ற செய்கு ஹுஸைன் பள்ளி.
இப்பள்ளியின் தலைவராக எஸ்.ஐ.அலீ அக்பர், செயலாளராக செய்கு ஹுஸைன், துணைச் செயலாளராக கே.எம்.யூஸுஃப், பொருளாளராக கே.எம்.இஸ்மத் ஆகியோர் பொறுப்பேற்று சேவையாற்றி வருகின்றனர்.
காயல்பட்டினம் தீவுத் தெருவைச் சார்ந்த ஹாஃபிழ் என்.டீ.ஷெய்கு சுலைமான் பள்ளியின் இமாமாகப் பணியாற்றி வருகிறார். நடப்பாண்டு ரமழான் தராவீஹ் - சிறப்புத் தொழுகையையும் இவரே வழிநடத்துகிறார். தைக்கா தெரு தையன்னா தலைவாசலைச் சேர்ந்த எம்.ஏ.முத்து மீரா லெப்பை என்ற முத்து லெப்பை முஅத்தினாக உள்ளார்.
நடப்பாண்டு ரமழான் கஞ்சி ஏற்பாடுகள், பள்ளியின் பொருளாளர் கே.எம்.இஸ்மத் ஒருங்கிணைப்பில் குழுவினரால் செய்யப்பட்டு வருகிறது.
இப்பள்ளியில் ஊற்றுக் கஞ்சி வினியோகிக்கப்படுவதில்லை. அன்றாடம் நடத்தப்படும் இஃப்தார் நோன்பு துறப்பு நிகழ்ச்சியில் பள்ளி சுற்றுப்புறத்தைச் சேர்ந்தவர்கள் - பேருந்து பயணியர் - கடை வீதிக்கு வந்தோர் என 20 முதல் 40 பேர் வரை பங்கேற்கின்றனர். அவர்களுக்கு, பேரீத்தம்பழம், தண்ணீர் பாக்கெட், கஞ்சி, வடை உள்ளிட்ட பதார்த்தங்கள் பரிமாறப்படுகிறது.
இப்பள்ளியில் இன்று (ஜூன் 08 புதன்கிழமை) நடைபெற்ற இஃப்தார் - நோன்பு துறப்பு நிகழ்ச்சியின்போது பதிவு செய்யப்பட்ட காட்சிகள்:-
செய்கு ஹுஸைன் பள்ளியில் ஹிஜ்ரீ 1435ஆம் ஆண்டில் நடைபெற்ற இஃப்தார் - நோன்பு துறப்பு நிகழ்ச்சி குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
செய்கு ஹுஸைன் பள்ளியின் வரலாற்றுத் தகவல்கள் அடங்கிய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
நடப்பாண்டு நகர பள்ளிவாசல்களில் நடைபெற்ற இஃப்தார் நிகழ்ச்சிகள் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
|