காயல்பட்டினம் சுற்றுப்புறத்தில், கடும் வெயில் பல நாட்களாக வாட்டி வந்த நிலையில், கடந்த சில நாட்களாக இதமான காற்றுடன் - தாங்குமளவில் வெயில் ஒளிர்கிறது.
இவ்வாறிருக்க, குற்றால சீசனை நினைவுபடுத்தும் வகையில், இன்று 12.00 மணியளவில் சுமார் 10 நிமிடங்கள் சாரல் மழை பெய்தது. இதன் காரணமாக, நகரில் வெயில் தாக்கம் குறைந்து, இதமான வானிலை நிலவுகிறது.
குற்றாலத்தில், மெய்ன் அருவி, ஐந்தருவி ஆகிய அருவிகளில் நேற்று வரை மலையையொட்டி தண்ணீர் விழுந்த நிலையில், தற்போது தண்ணீர் கொட்டுவதாக, படங்களுடன் தகவல் அதிகாரப்பூர்வமற்று கிடைக்கப்பெற்றுள்ளது.
இவை ஒருபுறமிருக்க, தமிழகத்தில் தென்மேற்குப் பருவமழை ஓரிரு நாட்களில் துவங்கவுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மழை தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
|