மரைக்கார் பள்ளி:
காயல்பட்டினம் மரைக்கார் பள்ளித் தெரு, சொளுக்கார் தெரு ஆகிய தெருக்களை அணைத்தாற்போல், அவற்றின் தென் முனையில் அமைந்துள்ளது மஸ்ஜிதுல் ஆமிர் எனும் மரைக்கார் பள்ளிவாசல்.
இப்பள்ளியில் ஹாஜி எஸ்.எம்.மூஸா தலைவராகவும், ஹாஃபிழ் எஸ்.எம்.முஹ்யித்தீன் துணைத்தலைவராகவும் சேவையாற்றி வருகின்றனர்.
சொளுக்கார் தெருவைச் சேர்ந்த ஹாஜி டி.எம்.கே.முத்து செய்யித் அஹ்மத் பள்ளியின் இமாமாகவும், மேலப்பாளையத்தைச் சேர்ந்த ஷாஹுல் ஹமீத் என்பவர் பிலாலாகவும் பணியாற்றி வருகின்றனர்.
நடப்பாண்டு தராவீஹ் தொழுகையை, மேலப்பாளையத்தைச் சேர்ந்த ஹாஃபிழ் ஒருவர் வழிநடத்தி வருகிறார்.
அப்பா பள்ளி:
காயல்பட்டினம் அப்பா பள்ளித் தெரு, பரிமார் தெரு ஆகிய தெருக்களை அணைத்தாற்போல், அவற்றின் தென்முனையில் அமைந்துள்ளது அப்பா பள்ளிவாசல்.
ஹாஜி எம்.எஸ்.கே.எஸ்.மரைக்கார் என்ற சி.எம்.கே. பள்ளியின் தலைவராகவும், ஹாஜி ஏ.எம்.இஸ்மாஈல் நஜீப் துணைத்தலைவராகவும் சேவையாற்றி வருகின்றனர்.
காயல்பட்டினத்தைச் சேர்ந்தவர்களான ஹாஃபிழ் டி.எச்.எம்.ரஹ்மத்துல்லாஹ் பக்ரீ பள்ளியின் இமாமாகவும், என்.டீ.ஹாமித் லெப்பை பிலாலாகவும் பணியாற்றி வருகின்றனர்.
நடப்பாண்டு ரமழான் இரவுத் தொழுகையையும் பள்ளியின் இமாமே வழிநடத்தி வருகிறார். அவருக்குத் துணையாக, அல்ஜாமிஉல் அஸ்ஹர் திருக்குர்ஆன் ஹிஃப்ழுப் பிரிவு மாணவர்களும் தொழுகை நடத்தி வருகின்றனர்.
இஃப்தார் ஏற்பாடுகள்:
மரைக்கார் பள்ளி - அப்பா பள்ளி ஆகிய இவ்விரு பள்ளிகளிலும், பல ஆண்டுகளாக தனித்தனியே நோன்புக் கஞ்சி ஏற்பாடு செய்யப்பட்டு வந்தது. இவ்விரு ஜமாஅத்தினரும் ஒரே எல்லைக்குள் உள்ளவர்கள் என்பதால் இருவேறு இடங்களில் தனித்தனியே செலவு செய்வதைத் தவிர்த்து, ரெட் ஸ்டார் சங்கத்தில், மரைக்கார் பள்ளி - அப்பா பள்ளி கூட்டு கஞ்சி கமிட்டி என்ற பெயரில் இரு ஜமாஅத்துகளும் இணைந்து நோன்புக் கஞ்சி ஏற்பாடுகளைச் செய்து வருகின்றனர்.
மாலையில் வினியோகிக்கப்படும் ஊற்றுக் கஞ்சியை இவ்விரு ஜமாஅத்திற்கும் உட்பட்ட பகுதிகளைச் சேர்ந்த 150 முதல் 200 குடும்பத்தினர் பெற்றுச் செல்கின்றனர். இஃப்தார் நிகழ்ச்சியில் 50 முதல் 75 பேர் வரை கலந்துகொள்கின்றனர்.
இன்று (ஜூன் 09 வியாழக்கிழமை) இஃப்தார் - நோன்பு துறப்பு நிகழ்ச்சியின்போது பதிவு செய்யப்பட்ட காட்சிகள்:-
ரெட் ஸ்டார் சங்கத்தில் ஹிஜ்ரீ 1435ஆம் ஆண்டில் நடைபெற்ற இஃப்தார் - நோன்பு துறப்பு நிகழ்ச்சி குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
ரெட் ஸ்டார் சங்கம் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
நடப்பாண்டு நகர பள்ளிவாசல்களில் நடைபெற்ற இஃப்தார் நிகழ்ச்சிகள் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
|