வி-யுனைட்டெட் காயல் ப்ரீமியர் லீக் கால்பந்து இறுதிப் போட்டியில், கேலரி பேர்ட்ஸ் அணி கோப்பையை வென்றது. இதுகுறித்து, வெளியிடப்பட்டுள்ள செய்தியறிக்கை:-
வீ-யூனைடெட் ஸ்போர்ட்ஸ் கிளப் நடத்திய 8ஆம் ஆண்டு காயல் பிரிமியர் லீக் கால்பந்து போட்டிகள் சென்ற 5ஆம் தேதி முதல் 14ஆம் தேதி வரை ஐக்கிய விளையாட்டுச் சங்க மைதானத்தில் நடைபெற்றது.
கால்பந்து வீரர்களுக்கும், ரசிகர்களுக்கும் மிகவும் விறுவிறுப்பாக காட்சியளித்த இப்போட்டியின் இறுதி ஆட்டத்தில் Gallery Birds அணியும், Canton Thunders அணியும் விளையாடின. இப்போட்டியில் Gallery Birds அணி 3 - 1 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்று 8ஆம் ஆண்டு கோப்பையை தட்டிச் சென்றது.
பின்னர் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் தமிழ்நாடு கால்பந்து கழகத்தின் நடுவர்கள் பயிற்சியாளர் திரு. ஜீவகன் அவர்களும், தூத்துக்குடி மாவட்ட லயன்ஸ் கிளப் ஆளுனர் திருமதி. சுதந்திர லெட்சுமி MJF அவர்களும் கலந்து கொண்டார்கள்.
நிகழ்வின் துவக்கமாக ஹாஃபிழ் முஹம்மது அலி இறைமறை வசனத்தை ஓதினார். அதனைத் தொடர்ந்து முஜாஹித் அலி வரவேற்புரையாற்றினார். அதனைத் தொடர்ந்து வீ-யூனைடெட் ஸ்போர்ட்ஸ் கிளப் குறித்த விளக்க உரையாற்றினார்.
பின்னர் சிறப்பு விருந்தினர்கள் உரையாற்றினார்கள். இதனையடுத்து பரிசளிப்பு விழா நிகழ்வுகள் துவங்கின, துவக்கமாக நடுவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன, இப்பரிசுகளை ஜனாப். M.I. பசீர் அஹமது வழங்கினார். போட்டி நடைபெற சிறப்பாக களஉதவிகள் செய்தவர்களுக்கான பரிசுகளை ஜனாப். சலாஹூத்தீன் வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து V-United KPL Division ”B” போட்டியின் சிறந்த கோல் கீப்பராக தேர்வு செய்யப்பட்ட Kayal Express அணியின் புஹாரி, சிறந்த பின்கள வீரராக தேர்வு செய்யப்பட்ட Kayal Manchester அணியின் ஜமால், சிறந்த நடுகள வீரராக தேர்வு செய்யப்பட்ட Kayal Express அணியின் முஹம்மது அலி மற்றும் போட்டித்தொடரின் சிறந்த வீரராக தேர்வு செய்யப்பட்ட V2 அணியின் லத்தீஃப் ஆகிய வீரர்களுக்கு செல்ஃபோன்கள் பரிசை காயல் ஸ்போர்டிங் கிளப்பின் செயலாளர் பேராசிரியர் ஜனாப். K.M.S. சதக்தம்பி காக்கா அவர்கள் வழங்கினார்கள்.
V-United KPL Division ”B” போட்டியில் அரையிறுதி வரை முன்னேரிய Kayal Kings மற்றும் Kayal Manchester அணிகளுக்கான தலா ரூ.4000 ரொக்கப்பரிசினை ஜனாப். ரஃபீக் அவர்கள் வழங்கினார்கள்.
இரண்டாம் இடம்பிடித்த Kayal Express அணிக்கான கோப்பை மற்றும் ரூ.12 ஆயிரத்திற்கான ரொக்கப்பரிசினையும், முதல் இடம்பிடித்த V2 அணிக்கான கோப்பை மற்றும் ரூ.17 ஆயிரம் ரொக்கப்பரிசினையும் சிறப்பு விருந்தினர் திருமதி. சுதந்திர லெட்சுமி MJF அவர்கள் வழங்கினார்கள்.
நிகழ்வின் அடுத்ததாக V-United KPL Division ”A” போட்டியின் சிறந்த கோல் கீப்பராக தேர்வு செய்யப்பட்ட Gallery Birds அணியின் ஃபாரூக், சிறந்த பின்கள வீரராக தேர்வு செய்யப்பட்ட Knight Riders அணியின் ஜெகிட், சிறந்த நடுகள வீரராக தேர்வு செய்யப்பட்ட Strange Spikers அணியின் முத்து ஸஃப்ரஸ் மற்றும் போட்டித் தொடரின் சிறந்த வீரராக தேர்வு செய்யப்பட்ட Gallery Birds அணியின் அமீர் ஆகிய வீரர்களுக்கு கைப்பேசி பரிசுகளை ஜனாப். V.M.S. அமீன் வழங்கினார்.
அரையிறுதி வரை முன்னேறிய Fi-Sky Boys மற்றும் Knight Riders அணியினருக்கான தலா ரூ. 5 ஆயிரம் ரொக்கப்பரிசினை விளக்கு M.A. செய்யது அஹமது அவர்கள் வழங்கினார்கள். இறுதிப் போட்டியில் வெற்றிக்குமுனைந்த Canton Thunders அணியினருக்கு கோப்பையையும், ரூ. 15 ஆயிரத்திற்கான ரொக்கப்பரிசினையும், வெற்றிபெற்ற Gallery Birds அணியினருக்கான கோப்பை மற்றும் ரூ. 20 ஆயிரத்திற்கான ரொக்கப்பரிசினையும் சிறப்பு விருந்தினர் திரு. ஜீவகன் அவர்கள் வழங்கினார்கள்.
இறுதியாக நன்றியுரையில், போட்டியை சிறப்பான முறையில் நடத்த வல்லமைதந்த எல்லாம்வல்ல இறைவனுக்கு முதலாவதாக நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். சிறப்பு விருந்தினர்களுக்கும், போட்டி நடத்த மைதானம் தந்துதவிய ஐக்கிய விளையாட்டுச் சங்க நிர்வாகிகளுக்கும், வீரர்கள் தந்துதவிய USC & KSC மைதான நிர்வாகிகளுக்கும், போட்டிகளை சிறப்பாக நடத்தித்தந்த நடுவர்களுக்கும், அணிகளை தந்துதவிய உரிமையாளர்களுக்கும், வீரர்களுக்கும், ஆன்லைன் விண்ணப்பங்களை வடிவமைத்து தந்த சகோ. பாளையம் யூனுஸ் முஸ்தஃபா அவர்களுக்கும், போட்டி ஒருங்கிணைப்புக்குழுவுடன் இணைந்து பணியாற்றிய சகோதர்கள் பசீர் அஹமது, புஹாரி, சேக்கனா லெப்பை, இஸ்மாயில் புஹாரி, இஸ்மாயில், கைசாலி, ஜமால், பாலப்பா அப்துல் காதர் ஆகியோர்களுக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல் & படங்கள்:
M.ஜஹாங்கீர்
கடந்தாண்டு (2015) வி-யுனைட்டெட் KPL கால்பந்து இறுதிப்போட்டி குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
வி-யுனைட்டெட் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
|