வி-யுனைட்டெட் காயல் ப்ரீமியர் லீக் க்ரிக்கெட் இறுதிப் போட்டியில், காயல் டைகர்ஸ் அணி கோப்பையை வென்றது. இதுகுறித்து, வெளியிடப்பட்டுள்ள செய்தியறிக்கை:-
வீ-யூனைடெட் ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பாக கடந்த 20ஆம் தேதி முதல் காயல் ஸ்போர்டிங் கிளப் மைதானத்தில் நடைபெற்ற காயல் பிரிமியர் லீக் கிரிக்கெட் போட்டியின் இறுதி போட்டி 29.05.2016. மாலை 4 மணியளவில் நடைபெற்றது.
இப்போட்டியில் Kayal Tigers அணியும், Kid ‘N’ Mom அணியும் விளையாடியது. டாஸில் வெற்றிபெற்ற Kayal Tigers அணியினர் முதல் பந்துவீசுவதாக அறிவித்தனர். அதன்படி முதலில் மட்டைபிடித்தாடிய Kid ‘N’ Mom அணியினர் எதிரணியின் பந்துவீச்சை தாக்குபிடிக்க முடியாமல் 35 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தனர்.
தொடர்ந்து மட்டைபிடித்தாடிய Kayal Tigers அணியினர் 4.1 ஓவரில் 1 விக்கெட்டை மட்டும் இழந்து வெற்றி இலக்கை அடைந்தனர்.
தொடர்ந்து நடைபெற்ற பரிசளிப்பு விழாவிற்கு S.I. அப்துல் காதர் அவர்கள் தலைமை தாங்கினார்கள். திருச்செந்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு. அனிதா R.ராதாகிருஷ்ணன் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்கள்.
இறைமறை வசனத்தை தொடர்ந்து, வரவேற்புரை வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து சிறப்பு விருந்தினருக்கு சால்லை அணிவிக்கப்பட்டது. தொடர்ந்து, எல்.எஸ்.இப்றாஹீம், தூத்துக்குடி மாவட்ட கிரிக்கெட் சங்கத்தின் செயலாளர் திரு. சிவகுமரன் மற்றும் சிறப்பு விருந்தினர் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.
பரிசளிப்பு விழாவின் துவக்கமாக போட்டித் தொடரின் சிறந்த மட்டையாளராக தேர்வு செய்யப்பட்ட Kid ‘N’ Mom அணியின் முஹம்மது அஸாருத்தீனுக்கு “BMW” மொபைல் பரிசும், சிறந்த பந்து வீச்சாளராக தேர்வு செய்யப்பட்ட Kayal Tigers அணியின் அப்துல் பாஸித்துக்கு “BMW” மொபைலும், போட்டித் தொடரின் சிறந்த வீரராக தேர்வு செய்யப்பட்ட Kayal Tigers அணியின் யாஸருக்கு Ferrari மொபைலும் வழங்கப்பட்டது. வளரும் இளம் வீரருக்கான பரிசை Fi-Sky Boys அணியின் அபூபக்கர் பெற்றார்.
வெற்றிக்கு முனைந்த Kid ‘N’ Mom அணியினருக்கு ரூ.12 ஆயிரம் ரொக்கப்பரிசு மற்றும் கோப்பை வழங்கப்பட்டது. இந்த பரிசுகளை, M.T. ஜெய்னுதீன், S.A.K. இஸ்ஸதீன், ஃபஸூலுல்ஹக், M.B.S. சுலைமான், S.I. அப்துல்காதர், L.S. அப்துல்காதர், தூத்துக்குடி மாவட்ட கிரிக்கெட் சங்க செயலாளர் சிவகுமரன், துணைச் செயலாளர் கிரிஸ்பின், ஞானி அபுல்ஹஸன், அப்துர்ரஹ்மான் மற்றும் வாவு W.S. சாஹூல்ஹமீது ஆகியோர் வழங்கினார்கள்.
வெற்றிபெற்ற Kayal Tigers அணியினருக்கு ரூ.17 ஆயிரம் ரொக்கப்பரிசு மற்றும் கோப்பையை சிறப்பு விருந்தினர் திரு. அனிதா R.ராதாகிருஷ்ணன் அவர்கள் வழங்கினார்.
இறுதியாக S.A.K. இஸ்ஸதீன் நன்றியுரையாற்றினார்.
போட்டிகளை சிறப்பான முறையில் நடத்த வல்லமைதந்த எல்லாம்வல்ல இறைவனுக்கு முதலாவதாக நன்றியினை தொரிவித்துக் கொள்கிறோம். இந்த இறுதிப்போட்டிக்கு சிறப்பு விருந்தினர்களாக வந்து கலந்து, இவ்விழாவிற்கு மேலும் மெருகூட்டிய சிறப்பு விருந்தினர்களுக்கும், போட்டிகள் நல்லமுறையில் நடைபெற மைதானம் தந்துதவிய காயல் ஸ்போர்டிங் கிளப் மைதானத்தின் நிர்வாகிகளுக்கும். வீரர்கள் தந்துதவிய USC & KSC மைதானத்தின் பொறுப்பாளர்களுக்கும்,
போட்டிகள் நல்லமுறையில் நடைபெற நடுவர்களாக பணியாற்றிய நண்பர்களுக்கும், அணிகளை தந்துதவிய உரிமையாளர்களுக்கும், வீரர்கள் சேர்க்க படிவத்தை ஆன்லைனில் வடிவமைத்துதந்த சகோ. பாளையம் யூனுஸ் முஸ்தஃபா அவர்களுக்கும்,
போட்டியில் பங்கேற்ற அனைத்து வீரர்களுக்கும், போட்டிகள் சிறப்பாக நடைபெற ஒருங்கிணைப்புக்குழுவுடன் இணைந்து செயலாற்றிய, சகோ. லத்தீஃப், எஸ்.ஓ. மீரா சாஹிப், செய்யது இப்றாஹீம், நவாஸ், மஃசூக், இஸ்மாயில், மீரா லெப்பை, அப்துல் ஹமீத், யாஸர் அரஃபாத், எம்.எம். சாஹூல் ஹமீது, ஜூமானி மற்றும் இதில் தவறுதலாக யாருடைய பெயர்களும் விடுபட்டு இருந்தால் மன்னிக்கவும், அனைத்து நல்உள்ளங்களுக்கும் எங்களின் வீ-யூனைடெட் ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பாக நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.
நிகழ்ச்சிகளை M.M.சாஹூல்ஹமீது தொகுத்து வழங்கினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை M.ஜஹாங்கிர், M.A. ஜவஹர், சொளுக்கு முஹம்மது தம்பி மற்றும் வீ-யூனைடெட் குழுமத்தினர் செய்திருந்தனர்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல் & படங்கள்:
M.ஜஹாங்கீர்
கடந்தாண்டு (2015) வி-யுனைட்டெட் KPL க்ரிக்கெட் இறுதிப்போட்டி குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
வி-யுனைட்டெட் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |