| 
 காயல்பட்டினம் தாயிம்பள்ளி ஜமாஅத்தைச் சேர்ந்த மாணவ-மாணவியருள் 10ஆம், 12ஆம் வகுப்பில் முதல் 3 மதிப்பெண்கள் பெற்றோருக்கு, தாயிம்பள்ளி ஜமாஅத் கல்வி நல அமைப்பு (Thaimpalli jamath Education Welfare Association - TEWA) சார்பில் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளதோடு, தகுதியுள்ளோர் வரும் ஜூன் 20ஆம் நாளுக்குள் விண்ணப்பிக்கவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இதுகுறித்து அவ்வமைப்பின் சார்பில், அதன் தலைவர் ஏ.லெப்பை ஸாஹிப் என்ற ஏ.எல்.எஸ். மாமா வெளியிட்டுள்ள அறிவிப்பு வருமாறு:- 
  
அஸ்ஸலாமு அலைக்கும். 
   
நமது TEWA அமைப்பு சார்பில் சென்ற வருடங்கள் போல இந்த ஆண்டும் (2016-17) +2 மற்றும் பத்தாம் வகுப்பு அரசு பொது தேர்வில் முதல் மூன்று இடங்களை பிடித்த நம் ஜமாஅத் (K.T.M தெரு மற்றும் அலியார் தெரு) மாணவ மாணவியர்களை ஊக்குவிக்கும் முகமாக பரிசுகள் வழங்குவது என முடிவெடுக்கப்பட்டுள்ளது. 
  
பரிசுகள் விபரம்: 
  
+2 தேர்வில் முதலிடம் Rs. 3000 
இரண்டாம் இடம் Rs .2000 
மூன்றாம் இடம் Rs .1000
  
இது போக 1000 மதிப்பெண்களுக்கு மேல் எடுத்த முதல் மூன்று மாணவ மாணவிக்கு தலா Rs .500
  
பத்தாம் வகுப்பில் முதலிடம் Rs .2000 
இரண்டாம் இடம் Rs .1000 
மூன்றாம் இடம் Rs .500
  
தேர்வு செய்யக்கூடிய முறை: 
  
1. மதிப்பெண் அடிப்படையில் முடிவு செய்யப்படும். 
  
2. ஒன்றுக்கும் அதிகமானோர் ஒரே மதிப்பெண் பெற்றிருந்தால் SUBJECT MARK  விகிதம் எடுக்கப்படும்(10th ல் MATHS ,SCIENCE ,SOCIAL SCIENCE -+2 ல் PHY ,CHE ,BIO &MATHS  OR  COMM, ACCOUT, ECONO) அதிலும் ஒரே மதிப்பெண் பெற்றிருந்தால் வயதில் குறைந்தவர் பரிசுக்குரியவர் ஆவார். 
  
3. மாணவ மாணவியர் நம் ஜமாத்தை சார்ந்தவராக இருக்க வேண்டும் (அலியார் மற்றும் KTM தெரு) 
  
4. இரு தெருக்களிலிருந்து வெளி தெருக்களில் திருமணம் செய்தவர்களின் பிள்ளைகள் அல்லது வெளி தெருவிலிருந்து நம் ஜமாத்தில் திருமணம் செய்து கொண்டோரின் பிள்ளைகளும் தகுதி பெற்றோர் ஆவர். 
  
தகுதியானவர்கள் குறிப்பிட்ட திகதிக்குள் (20/06/2016) தங்களின் மதிப்பெண் சான்றிதழ் நகலை (MARK  SHEET XEROX) உஸ்மான், ஆய்ஷா மளிகை கடை, KTM தெரு அல்லது பைசல் (9944329517)  இடம் ஒப்படைக்கவும், குறிப்பிட்ட திகதிக்கு பின்னர் வரும் MARK SHEET XEROXகள் பரிசுக்கு தகுதி பெற்றிருந்தாலும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது என்றும் அறிவிக்கப்படுகிறது. 
  
பரிசுக்கு உரியவர்கள் பரிசீலனைக்கு பின்னர் அறிவிக்கப்படுவார், பரிசளிப்பு நாள் பின்னர் அறிவிக்கப்படும். 
  
இவ்வாறு தாயிம்பள்ளி ஜமாஅத் கல்வி நல அமைப்பு (Thaimpalli jamath Education Welfare Association - TEWA) சார்பில், அதன் தலைவர் ஏ.லெப்பை ஸாஹிப் என்ற ஏ.எல்.எஸ். மாமா அறிவித்துள்ளார். 
  
தாயிம்பள்ளி ஜமாஅத் கல்வி நல அமைப்பு சார்பாக...  
தகவல்:  
D.ஷேக் அப்பாஸ் ஃபைஸல்
  
தாயிம்பள்ளி ஜமாஅத் கல்வி நல அமைப்பு சார்பில், இதற்கு முன் (2014ஆம் ஆண்டு) நடத்தப்பட்ட கல்விச் சாதனையாளர்களுக்கான பரிசளிப்பு விழா குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக!  |