ஐக்கிய அரபு அமீரகம் - துபை காயல் நல மன்ற செயற்குழுக் கூட்டத்தில், நகர்நலப் பணிகளுக்காக நிதியொதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து, அவ்வமைப்பின் செயலாளர் டீ.எஸ்.ஏ,யஹ்யா முஹ்யித்தீன் வெளியிட்டுள்ள நிகழ்வறிக்கை:-
கடந்த 03.06.2016 வெள்ளியன்று துபை காயல் நல மன்ற செயற்குழுக் கூட்டம் மன்றத் தலைவர் ஜே.எஸ்.ஏ. புகாரீ அவர்கள் இல்லத்தில் நடைபெற்றது.
ஹாஃபிழ் ஸலாஹுத்தீன் அவர்கள் இறைமறை வசனங்களை ஓதி நிகழ்ச்சியைத் துவக்கி வைத்தார். செயற்குழு உறுப்பினர் S.S. அப்துல்லாஹ் அவர்கள் கூட்டத்திற்கு தலைமை தாங்கினார்.
கூட்டத்தில் மன்றத்தின் செயல்பாடுகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டன. புனித ரமலான் மாதத்தில் மன்றத்தின் சார்பாக வழங்கப்படும் பொருளாதார உதவிகளை வழமை போல் இந்த வருடமும் வழங்கிட செயற்குழு தீர்மானித்தது.
சிறுதொழில் உதவிக் குழு மூலமாக சிறுதொழிலுக்கான பொருளாதார உதவிகளுக்காக வந்திருந்த விண்ணப்பங்கள் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்டு, ஒப்புதல் வழங்கப்பட்டு, உரிய உதவித் தொகைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன.
ஏழை முதியவர்களுக்கு உதவித் தொகைகள் வழங்குவதற்காக வந்த விண்ணப்பங்கள் கலந்தாய்வு செய்யப்பட்டு அவர்களுக்கு உதவித்தொகை அளிக்க ஒப்புதல் அளித்து, நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
மஸ்ஜித் இமாம்களுக்கும், முஅத்தின்களுக்கும் மன்றம் மூலம் வழமையாக வழங்கப்படும் ஊக்கத் தொகைகள் மன்றத்தின் பொது நிதியிலிருந்து வழங்குவது என்று தீர்மானிக்கப்பட்டது.
தாருஸ் ஸலாம் அறக்கட்டளைக்கு மன்றத்தின் சார்பாக பொருளாதார உதவிகள் அளிப்பதற்கான முடிவு செய்வதற்கு முன்பு அதன் பணிகள், நோக்கம் குறித்த தகவல்களை அறிந்து கொள்வது என்று தீர்மானிக்கப்பட்டது.
கேஎம்டி மருத்துவமனை நிர்வாகச் செயல்பாடுகள் குறித்த நிறைகுறைகளை ஊருக்குச் செல்லும்பொழுது மன்ற நிர்வாகிகள் நேரடியாக கேஎம்டிக்குச் சென்று பேசிக்கொள்வது என்று தீர்மானிக்கப்பட்டது.
இறுதியில் கஃப்பாராவுடன் கூட்டம் நிறைவுற்றது.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
துபை கா.ந.மன்றம் சார்பாக...
தகவல்:
M.S.அப்துல் ஹமீத்
படங்கள்:
முஹம்மத் நியாஸ்
துபை காயல் நல மன்றத்தின் முந்தைய செயற்குழுக் கூட்டம் குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
துபை காயல் நல மன்றம் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |