காயல்பட்டினம் மஹ்ழரா அரபிக்கல்லூரியின் பட்டமளிப்பு விழா 18.05.2016. புதன்கிழமை காலை 09.00 மணிக்கு, கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.
கல்லூரியின் தலைவர் எஸ்.கே.இசட்.ஆப்தீன் தலைமை தாங்கினார். மஹ்ழரா திருக்குர்ஆன் மத்ரஸா ஆசிரியர் ஹாஃபிழ் சொளுக்கு எஸ்.எம்.எஸ்.முஹ்யித்தீன் அப்துல் காதிர் தவ்ஹீத் கிராஅத் ஓதி நிகழ்ச்சிளைத் துவக்கி வைத்தார். உதவி தலைவர் வாவு எஸ்.காதிர் ஸாஹிப் வரவேற்றுப் பேசினார்.
கல்லூரி முதல்வர் மவ்லவீ எஸ்.டி.அம்ஜத் அலீ மஹ்ழரீ ஃபைஜீ மாணவர்களுக்கு பட்டச் சான்றிதழை (ஸனது) வழங்கி, பட்டமளிப்பு விழா உரையாற்றினார்.
இவ்விழாவில், காயல்பட்டினம் மகுதூம் தெருவைச் சேர்ந்த எம்.எல்.காழி அலாவுத்தீன் என்பவரது மகன் மவ்லவீ ஹாஃபிழ் அஃப்ழலுல் உலமா கே.ஏ.ஜாஸிர் உட்பட 17 மாணவர்கள் ‘மவ்லவீ ஆலிம் மஹ்ழரீ’ பட்டம் பெற்றனர்.
பின்னர், கடந்த கல்வியாண்டில் சிறந்த மதிப்பெண்களைப் பெற்ற மாணவர்கள், போட்டிகளில் வென்ற மாணவர்களுக்கு சிறப்புப் பரிசுகள் வழங்கப்பட்டன. மேடையில் அங்கம் வகித்த சிறப்பு விருந்தினர்களும், முன்னிலையாளர்களும் அவற்றை மாணவர்களுக்கு வழங்கினர்.
கல்லூரியின் பேராசிரியர்கள் வாழ்த்துரை வழங்கினர். நாகூர் மஹான் ஷாஹுல் ஹமீத் பாதுஷா நாயகம் அவர்களின் பரம்பரையில் வந்த மஸ்தான் ஸாஹிப் காதிரீ, மக்ஸூத் ஸாஹிப் காதிரீ, சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட வேலூர் பாக்கியாத்துஸ் ஸாலிஹாத் அரபிக் கல்லூரியின் பேராசிரியர் அஃப்ழலுல் உலமா மவ்லவீ எம்.அப்துல் ஹமீத் பாக்கவீ ஆகியோர், பட்டம் பெற்ற மாணவர்களை வாழ்த்தி சிறப்புரையாற்றினர்.
பட்டம் பெற்ற மாணவர்கள் சார்பில், மவ்லவீ எஸ்.அபுல்ஹஸன் ரிஜ்வீ ஏற்புரையாற்றினார்.
நடப்பு கல்வியாண்டில், திருக்குர்ஆன் மனன (ஹிஃப்ழு)ப் பிரிவில் புதிதாக இணைந்துள்ள மாணவர்களுக்கு இவ்விழாவில் சிறப்பு விருந்தினரால் பாடம் துவக்கிக் கொடுக்கப்பட்டது.
கல்லூரியின் உதவி செயலாளர் ‘ஜெஸ்மின்’ ஏ.கே.கலீலுர்ரஹ்மான் நன்றி கூற, செயற்குழு உறுப்பினர் மவ்லவீ ஹாஃபிழ் கே.ஏ.அஹ்மத் அப்துல் காதிர் மஹ்ழரீயின் துஆவுடன் நிகழ்ச்சிகள் நிறைவுற்றன.
விழா ஏற்பாடுகளை, கல்லூரி செயலாளர் எம்.ஏ.எஸ்.அபூதல்ஹா, கணக்குத் தணிக்கையாளர் எம்.கே.முஹ்யித்தீன் தம்பி (துரை) உள்ளிட்ட நிர்வாகிகள், நிர்வாகக் குழு உறுப்பினர்கள் செய்திருந்தனர்.
தகவல்:
மவ்லவீ ஹாஃபிழ் S.செய்யித் அப்துர்ரஹ்மான் தங்ஙள் அஹ்ஸனீ ஃபாழில் பாக்கவீ
(பேராசிரியர்: மஹ்ழரா அரபிக் கல்லூரி)
படங்களில் உதவி:
ஃபாஸில் ஸ்டூடியோ
மஹ்ழரா அரபிக்கல்லூரியில் கடந்தாண்டு (1436) நடைபெற்ற பட்டமளிப்பு விழா குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
மஹ்ழரா தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |