காயல்பட்டினம் மரைக்கார்பள்ளித் தெருவிலுள்ள பெரிய கல் தைக்கா என்றழைக்கப்படும் முஹ்யித்தீன் பெண்கள் தைக்கா வளாகத்தில் நடைபெற்று வருகிறது முஹ்யித்தீன் மத்ரஸத்துன் நிஸ்வான் மகளிர் பாடசாலை.
பள்ளிக்கூடம் செல்லும் மாணவியருக்கு, அவர்களின் வார விடுமுறைக் காலங்களில் தீனிய்யாத் எனும் மார்க்கக் கல்வி இம்மத்ரஸா மூலம் போதிக்கப்பட்டு வருகிறது.
ஆண்டுதோறும் இம்மத்ரஸா சார்பில் மார்க்க விழாக்கள் நடத்தப்பட்டு வருகிறது. நடப்பாண்டு விழாக்கள் கடந்த மே மாதம் 24, 25, 26 (வெள்ளி, சனி, ஞாயிறு) ஆகிய நாட்களில், சொளுக்கார் தெரு பெண்கள் வெட்டையில் நடைபெற்றது.
மாணவியர் பங்கேற்ற சன்மார்க்கப் போட்டிகள் பல நடத்தப்பட்டன. ஆசிரியையர், முன்னாள் மாணவியர், பொறுப்பாளர்கள் பங்கேற்ற - “இணையதளப் பயன்பாட்டுக் கருவிகள் சிறந்தவையா, சீர்குலைப்பவையா?” எனும் தலைப்பிலான கலந்துரையாடல் நிகழ்ச்சி அனைவரையும் கவருவதாக அமைந்திருந்தது.
நபிகள் நாயகம் அவர்கள், இறைநேசர்கள் புகழ் கூறும் பன்மொழிப் பாடல்கள், மாணவ-மாணவியரின் பல்வேறு தலைப்புகளிலான பேச்சுகள் ஆகியனவும் நிகழ்ச்சியில் இடம்பெற்றன.
நிறைவில், கடந்த கல்வியாண்டில் மத்ரஸா கல்வியில் சிறப்பிடங்களைப் பெற்ற மாணவியருக்கும், விழாவையொட்டி நடைபெற்ற போட்டிகளில் சிறப்பிடங்களைப் பெற்ற மாணவியருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.
அனைத்து நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகளையும், மத்ரஸா நிர்வாகிகள், பொறுப்பாளர்கள், முன்னாள் - இந்நாள் மாணவியர் இணைந்து செய்திருந்தனர்.
முஹ்யித்தீன் மத்ரஸத்துன் நிஸ்வான் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
|