காயல்பட்டினம் சுற்றுவட்டாரத்தில் கடந்த பல நாட்களாக தாங்க முடியாத அளவுக்கு கடும் வெயில் வாட்டி வரும் நிலையில், அவ்வப்போது சாரல், சிறுமழை, இதமழை என மாறி மாறிப் பொழிந்து வானிலையின் வழமையை மாற்றுவது வாடிக்கையாகிப் போனது.
27.05.2016. வெள்ளிக்கிழமையன்று 16.30 மணிக்குத் துவங்கி, சுமார் 30 நிமிடங்கள் நகரில் இதமழை பெய்தது.
அடுத்த நாளே அதற்கான சுவடுகளை சிறிதும் அறிய முடியாத அளவுக்கு வெயில் வாட்டத் துவங்கிவிட்டது. இவ்வாறிருக்க, இன்று 15.30 மணி துவங்கி, தற்போது 16.30 மணியளவிலும் நகரில் இதமழை பெய்து வருகிறது.
இதன் காரணமாக, நகரில் இதமான வானிலை நிலவுகிறது. ஆங்காங்கே தண்ணீர் தேங்கி காணப்படுகிறது.
மழை தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
|