தமிழக சட்டமன்றத் தேர்தல் 16.05.2016. அன்று நடைபெற்றது. இதில், கடையநல்லூர் சட்டமன்றத் தொகுதியில், திமுக கூட்டணி சார்பில் - அதில் அங்கம் வகிக்கும் இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தமிழ்நாடு மாநில பொதுச் செயலாளரும், காயல்பட்டினத்தைச் சேர்ந்தவருமான கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கர் போட்டியிட்டார்.
அவரது வெற்றிக்காக காயல்பட்டினத்தைச் சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் - கட்சி, இயக்க, கொள்கை வேறுபாடுகளைக் கடந்து கடையநல்லூர் சென்று களப்பணியாற்றினர்.
காயல்பட்டினம் சதுக்கைத் தெருவைச் சேர்ந்த பாளையம் முஹம்மத் இஸ்மாஈல் ஸாஹிபும் தன் நண்பர்களுடன் வாகனத்தில் சென்று அவருக்காகக் களப்பணியாற்றினார். பின்னர் சில பொதுநலப் பணிகளை முடித்துவிட்டு, ஊர் திரும்புகையில் அவரது வாகனம் விபத்துக்குள்ளாகி, நிகழ்விடத்திலேயே அவர் உயிரிழந்தார்.
இவ்வாறிருக்க, கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கர் வெற்றி பெற்றதாக தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்டதையடுத்து, சொந்த ஊரான காயல்பட்டினம் வந்த அவருக்கு நகரில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. முன்னதாக, காயல்பட்டினத்தில் தனது முதல் பணியாக - விபத்தில் காலமான பாளையம் முஹம்மத் இஸ்மாஈல் இல்லத்துக்கு நேரில் சென்று அவர் ஆறுதல் கூறிப் பிரார்த்தித்தார்.
இதுகுறித்து, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தூத்துக்குடி மாவட்ட செய்தி தொடர்பாளர் ஏ.ஆர்.ஷேக் முஹம்மத் வெளியிட்டுள்ள செய்தியறிக்கை:-
தமிழக சட்டமன்றத் தேர்தல் 16.05.2016. அன்று நடைபெற்றது. இதில், கடையநல்லூர் சட்டமன்றத் தொகுதியில், திமுக கூட்டணி சார்பில் - அதில் அங்கம் வகிக்கும் இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தமிழ் மாநில பொதுச் செயலாளரும், காயல்பட்டணத்தைச் சேர்ந்தவருமான கே.ஏ.எம்.முஹம்மது அபுபக்கர் முஸ்லிம் லீகின் சொந்த சின்னமான ஏணி சின்னத்தில் களம் கண்டார்.
தமிழகம் முழுவதும் 19.05.2016. அன்று தேர்தல் முடிவுகள் வெளியாயின. நண்பகல் 12.30 மணியளவில் கடையநல்லூர் தொகுதியின் முடிவுகள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டன. அதில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர் கே.ஏ.எம்.முஹம்மது அபுபக்கர் 1194 வாக்குகள் வேறுபாட்டில் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டார். அதிமுக வேட்பாளர் ஷேக் தாவூத் இரண்டாமிடத்திற்குத் தள்ளப்பட்டார். வெற்றி அறிவிப்புக்குபின் கடையநல்லூர் நகர மணிக்கூண்டு அருகில் திமுக மற்றும் கூட்டணி கட்சியினர் அளித்த உற்சாக வரவேற்ப்பு நிகழ்வில் கலந்துவிட்டு - நல்லிரவில் கடையநல்லூரிலிருந்து சொந்த ஊரான காயல்பட்டணத்தில் தனது தாய், தந்தைய காண வந்திருந்தார்.
மறுநாள் 20-ஆம் தேதி வேட்பாளரின் வெற்றிக்காக, கடையநல்லூரில் களப்பணியாற்றி விட்டு ஊர் திரும்புகையில் நாங்குநேரி அருகே வாகன விபத்தில் உயிரிழந்த, காயல்பட்டணம் சதுக்கைத் தெருவைச் சேர்ந்த – இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பிரமுகர் மர்ஹூம் தியாகி பீ.எச்.எம்.முஹம்மது அப்துல் காதிர் அவர்களின் மகன் வழிப் பேரனும், தமிழ்நாடு ஹஜ் கமிட்டி செயற்குழு உறுப்பினரும், காயல்பட்டணம் பைத்துல்மால் அறக்கட்டளையின் அறங்காவலர்களுள் ஒருவரான பாளையம் ஹபீப் முஹம்மது உடைய மகன் மர்ஹூம் பாளையம் முஹம்மது இஸ்மாயில் ஸாஹிப் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
மறைந்த மர்ஹூம் பாளையம் முஹம்மது இஸ்மாயிலின் மண்ணறை, மறுமை நல்வாழ்வுக்காக துஆ பிரார்த்தனை செய்யப்பட்டது. இலங்கை - கொழும்பு சம்மாங்கோட் பள்ளியின் கத்தீப் மவ்லவீ நஹ்வீ ஐ.எல்.செய்யித் அஹ்மத் முத்துவாப்பா ஃபாஸீ பிரார்த்தனையை வழிநடத்தினார்.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் தமிழ் மாநில துணைச் செயலாளர் எஸ்.ஏ.இபராஹிம் மக்கி, தூத்துக்குடி மாவட்ட தலைவர் ஹாஜி பி.மீராச மரைக்காயர், மாவட்ட பொருளாளர் கே.மீராச, தூத்துக்குடி மாநகர செயலாளர் முஹம்மது அலி பாதுசா, மாவட்ட பிரதிநிதி எம்.அப்துல் கனி, காயல்நகர செயலாளர் ஏ.எல்.எஸ்.அபுசாலிஹ், மூன்றாவது வார்டு தலைவர் கே.எம்.என்.மஹ்மூது லெப்பை (எஃப்.எம்.ஸ்டோர்), இரண்டாவது வார்டு செயலாளர் எம்.ஜெட்.சித்தீக், ஏழாவது வார்டு தலைவர் என்.டி.முஹம்மது இஸ்மாயில் புஹாரி, முஸ்லிம் லீக் உறுப்பினர்கள் நேஷ்னல் காஜா, எம்.எல்.முஹம்மது முஹையத்தீன், கடையநல்லூர் இப்ராஹிம், கபீர் உடனிருந்தனர்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |