| செய்தி எண் (ID #) 17837 |  |     | 
| வியாழன், மே 26, 2016 | 
| ரியாத் கா.ந.மன்ற ஆலோசகரின் சகோதரர் காலமானார்! நாளை காலை 8 மணிக்கு நல்லடக்கம்!! | 
செய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்) இந்த பக்கம் 4598 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (29) <> கருத்து பதிவு செய்ய | 
 | 
| 
  சஊதி அரபிய்யா - ரியாத் காயல் நல மன்றத்தின் ஆலோசனைக் குழு உறுப்பினர் கூஸ் எஸ்.ஏ,டீ.முஹம்மத் அபூபக்கர் என்ற கூஸ் அபூவின் சகோதரர், காயல்பட்டினம் நெய்னார் தெருவைச் சேர்ந்த கூஸ் எஸ்.ஏ.டீ.ஷாஹுல் ஹமீத் ஸலீம் என்ற கூஸ் ஸலீம், இன்று 00.15 மணியளவில் காலமானார். அவருக்கு வயது 52. அன்னார், 
  
மர்ஹூம் கூஸ் செய்யித் அபூதாஹிர் அவர்களின் மகனும், 
  
மர்ஹூம் ஏ.ஏ.முஹம்மத் உமர் ஸாஹிப் அவர்களின் மருமகனாரும், 
  
சஊதி அரபிய்யா - ரியாத் காயல் நல மன்றத்தின் ஆலோசனைக் குழு உறுப்பினர் கூஸ் எஸ்.ஏ,டீ.முஹம்மத் அபூபக்கர் என்ற கூஸ் அபூவின் சகோதரரும், 
  
கூஸ் செய்யித் அபூதாஹிர் என்பவரின் தந்தையும், 
  
எம்.ஏ.செய்யித் அஹ்மத் பஷீர், சோனா எம்.ஏ,முஹ்யித்தீன் அப்துல் காதிர், எம்.ஏ.செய்யித் அப்துல் பாரீ ஆகியோரின் மருமகனும், 
  
கத்தீப், அப்துல் மத்தீன் ஆகியோரின் சகலையும் ஆவார். 
  
அன்னாரின் ஜனாஸா, நாளை (27.05.2016. வெள்ளிக்கிழமை) காலை 08.00 மணிக்கு, குருவித்துறைப்பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.
  
தகவல்:  
மன்னர் பாதுல் அஸ்ஹப்
  
படம்:  
K.M.T.சுலைமான்
  
[கூடுதல் தகவல் இணைக்கப்பட்டது @ 23:59 / 26.05.2016.]
  |