தமிழக சட்டமன்றத் தேர்தல் 16.05.2016. அன்று நடைபெற்றது. இதில், அதிமுக கூட்டணியின் சார்பில் - மனிதநேய ஜனநாயகக் கட்சியின் பொதுச் செயலாளர் தமீமுன் அன்சாரீ - நாகப்பட்டினம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றார்.
இதனையடுத்து அவர், 27.05.2016. வியாழக்கிழமையன்று காயல்பட்டினம் வந்து கிளை நிர்வாகிகளைச் சந்தித்துப் பேசியதுடன், பேருந்து நிலையம் அருகில் கட்சிக் கொடியையேற்றினார்.
அவருடன், கட்சியின் மாநில பொருளாளர் ஹாரூன், மாநில செயலாளர்களான தைமிய்யா, நாச்சிகுளம் தாஜுத்தீன் உள்ளிட்டோர் இணைந்து வந்திருந்தனர்.
முன்னதாக, வாவு வஜீஹா வனிதையர் கல்லூரியில், அதன் நிறுவனர் தலைவர் வாவு செய்யித் அப்துர்ரஹ்மான் தலைமையில், மஜக குழுவினருக்கு தேனீர் விருந்தளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
மஜக தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |