காயல்பட்டினம் மஜ்லிஸுல் புகாரி ஷரீஃப் வளாகத்தில் - பள்ளிக்கூடம் செல்லும் மாணவர்களுக்கு இஸ்லாமிய அடிப்படைக் கல்வியைப் பயிற்றுவிப்பதற்காக இயங்கி வரும் மத்ரஸத்துல் ஹாமிதிய்யாவின் மார்க்க விழாக்கள், நிகழும் மே 28, 29, 30 நாட்களில் (சனி, ஞாயிறு, திங்கள்) நடைபெறவுள்ளன.
சன்மார்க்கக் கல்வி, சன்மார்க்கப் போட்டிகள், உடற்பயிற்சி, சொற்பயிற்சி மன்றம், திருக்குர்ஆன் ஹிஃப்ழு (மனனம்) என பல்வேறு அம்சங்களை உள்ளடக்கி மாணவர்களுக்குப் பயிற்றுவிக்கப்படுகிறது.
இந்நிறுவனத்தின் மூலம் ஆண்டுதோறும் மே மாதம் கோடை விடுமுறையின்போது மார்க்க விழாக்கள் நடத்தப்பட்டு வருகிறது. நடப்பாண்டின் மார்க்க விழாக்கள், குறித்த விளக்கப் பிரசுரம்:-
மார்க்க விழாக்களை முன்னிட்டு, சன்மார்க்க முன்னோடிப் போட்டிகள் - 26.05.2016. வியாழக்கிழமையன்று நடைபெற்றது. இதில், வினா-விடை, அல்அஸ்மாஉல் ஹுஸ்னா, கிராஅத் ஆகிய போட்டிகள் அடங்கும்.
இன்று 17.00 மணி முதல் 21.00 மணி வரை - மாணவர் முதற்கட்ட நகர்வலம் - நிர்ணயிக்கப்பட்ட வழித்தடங்களின் வழியே செல்லவுள்ளது.
கடந்தாண்டு (2015) ஹாமிதிய்யாவில் நடைபெற்ற மார்க்க விழாக்கள் குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
ஹாமிதிய்யா தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
[கூடுதல் தகவல் இணைக்கப்பட்டது @ 13:29 / 27.05.2016.]
|