காயல்பட்டினம் ஐக்கியப் பேரவை - ஹாங்காங் அமைப்பின் வருடாந்திர பொதுக்குழுக் கூட்டம், இம்மாதம் 28ஆம் நாள் வரும் சனிக்கிழமையன்று, ஹாங்காங் கவ்லூன் பள்ளியின் சமுதாயக் கூடத்தில் கூடவிருப்பதாகவும், காயல்பட்டினத்தைச் சேர்ந்த அனைவரும் கலந்துகொள்ளுமாறும் அவ்வமைப்பின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அவ்வமைப்பின் செயலாளர் எம்.செய்யது அஹமது வெளியிட்டுள்ள அழைப்பறிக்கை:-
அன்பின் காயல்பட்டினம் ஐக்கியப் பேரவை - ஹாங்காங் உறுப்பினர்களுக்கும், ஹாங்காங் - சீனா வாழ் காயலர்களுக்கும் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு.
இறையருளால் நம் மன்றத்தின் 8ஆவது பொதுக்குழு, இன்ஷாஅல்லாஹ் இம்மாதம் 28ஆம் நாள் வரும் சனிக்கிழமை இரவு மஃரிப் தொழுகைக்குப் பின், ஹாங்காங் கவ்லூன் பள்ளி சமுதாயக் கூடத்தில் நடைபெறவிருக்கிறது.
நகர்நலன் குறித்த பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதிக்கப்படவுள்ள இக்கூட்டத்தில், நமதமைப்பின் அன்பு உறுப்பினர்கள் மற்றும் ஹாங்காங் - சீனா வாழ் காயலர்கள் தயவுகூர்ந்து உங்கள் பொன்னான நேரத்தை ஒதுக்கி கலந்துகொள்ள வருமாறு அகமகிழ அன்புடன் அழைக்கின்றோம்.
அமைப்பின் சார்பில் அனுப்பப்பட்ட தகவல் கிடைக்கப் பெறாதவர்களும், வந்த தகவல்களை இதுவரை பார்க்காதவர்களும், இதையே அன்பான அழைப்பாக ஏற்று, தாங்களும் வருவதோடு, நமதூரின் - தங்களுக்கறிமுகமான அனைத்து சகோதரர்களையும் அவசியம் குறித்த நேரத்தில் பங்கேற்கச் செய்யுமாறு அன்புடன் வேண்டுகிறோம்.
கூட்டத்தின் இறுதியில் இரவுணவு விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
எல்லாம்வல்ல அல்லாஹ் நமது நற்காரியங்கள் அனைத்தையும் ஏற்று, இம்மை - மறுமையில் நிறைவான நற்கூலிகளை நமக்கு வழங்கியருள்வானாக.
குறிப்பு: இக்கூட்டம் ஆண்கள் மட்டுமே கலந்துகொள்ளும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்பதை தங்கள் மேலான கவனத்திற்கு அன்புடன் அறியத் தருகிறோம்.
இவ்வாறு, அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹாங்காங் பேரவையின் முந்தைய (7ஆவது) பொதுக்குழுக் கூட்டம் குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
ஹாங்காங் பேரவை தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
|