தமிழக சட்டமன்றத் தேர்தல் 16.05.2016. அன்று நடைபெற்றது. இதில், கடையநல்லூர் சட்டமன்றத் தொகுதியில், திமுக கூட்டணி சார்பில் - அதில் அங்கம் வகிக்கும் இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தமிழ்நாடு மாநில பொதுச் செயலாளரும், காயல்பட்டினத்தைச் சேர்ந்தவருமான கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கர் போட்டியிட்டு, வெற்றிபெற்றார்.
அவரை வாழ்த்தி, காயல்பட்டினம் ஐக்கியப் பேரவை - ஹாங்காங் அமைப்பின் சார்பில், அதன் தலைவர் கிழுறு முஹம்மத் ஹல்லாஜ் வெளியிட்டுள்ள அறிக்கை:-
ஹாங்காங் காயல் ஐக்கிய பேரவை தலைவர் MLA முஹம்மது அபூபக்கர் அவர்களுக்கு வாழ்த்து!
வல்ல நாயனின் பேரருளாலும் அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி அவர்களின் துஆ பரக்கத்தினாலும், நடந்து முடிந்த தமிழக சட்டமன்ற பேரவை பொது தேர்தலில் களமிறங்கி கடையநல்லூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றியினை பெற்ற இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் பொதுச் செயலாளரும், அன்பிற்கினிய நண்பருமான சரித்திர நாயகர் KAM அபூபக்கர் அவர்களை வாழ்த்தி துஆ செய்வதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறோம்.
நமதூரின் முதல் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப் பட்டது நமக்கெல்லாம் பெருமையையும் வலிமையையும் தருகிறது. நண்பர் அபூபக்கர் அவர்கள் நல்லவர், நியாயம் மிக்கவர், சேவை உள்ளம் கொண்டவர், அன்பாக பழகக்கூடியவர். இப்படிப்பட்டவரை நமது நாட்டில் பிரதிநிதியாக நமக்கு தந்த வல்லோன் அல்லாஹ்வை புகழ்கிறோம்.
அவர் கடையநல்லூர் தொகுதி மக்களுக்காகவும், நமதூருக்காகவும் மற்றும் நலிவுற்றோர்களுக்காகவும் நற்சேவை செய்வார் என்பதில் நமக்கு ஐயமில்லை, இன்ஷா அல்லாஹ்! பேரிறையோன் அல்லாஹ் அவருக்கு நல்ல உடல் ஆரோக்கியத்தையும், அவனுடைய ரஹ்மத்தையும், அவருடைய சேவைகளில் துணையையும் அருள்புரிவானாக என்று மனதார துஆ செய்கின்றோம்.
மேலும் ஹாஜியப்பா தைக்கா மஸ்ஜிதை அடுத்து அமைந்திருக்கும் நமது “KUF Hong Kong Garments & Tailoring” தொழிற்கூடத்தை நண்பர் அபூபக்கர் MLA அவர்கள் வருகின்ற நோன்பு பெருநாளிற்கு பிறகு, 10/Jul/2016 திகதி அன்று துவக்கி வைக்க உள்ளார்கள் என்பதை மிக்க மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறோம், இன்ஷா அல்லாஹ். வஸ்ஸலாம்!
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
B.S.ஷாஹுல் ஹமீத் B.Sc.,
(துணைத்தலைவர், காயல்பட்டினம் ஐக்கியப் பேரவை - ஹாங்காங்)
ஹாங்காங் பேரவை தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |