செய்தி: ஃபாத்திமா மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளியில் மாணவர்களைச் சேர்க்க வேண்டாம்! பெற்றோருக்கு மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் கடிதம்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...உரிமை வேறு அத்து மீறல் வேறு posted bymackie noohuthambi (kayalpatnam )[06 June 2016] IP: 163.*.*.* Japan | Comment Reference Number: 44011
பாத்திமா மழலையர் பள்ளி கூடம் அதனை நடத்தும் நிர்வாகிகள் எவள்ளவு நல்லெண்ணம் படைத்தவர்களாக இருந்தாலும் அங்கு கல்வி கற்கும் மாணவ மாணவிகளின் பெற்றோர்கள் எவ்வளவு ஆவலுடன் இந்த பள்ளியில் தங்கள் மக்களை கல்வி பயில அனுப்பி இருந்தாலும் அரசு இந்த பள்ளியை அங்கீகரிக்காமல் இருக்கும் நிலையில் அதை அத்து மீறி பூட்டை உடைத்து உள்ளே செல்வதென்பது கண்ணியக் குறைவானது.
நமது பக்கம் உள்ள நியாயங்களை எடுத்து சொல்ல நீதி மன்றம் இருக்கிறது. நமது உரிமைக்கு குரல் கொடுத்து நமது வாதங்களை எடுத்து சொல்லி அரசு அங்கீகாரத்தை பெற முயற்சி செய்யுங்கள். மாறாக அரசுடன் மோதும் போக்கை தவிர்த்துக் கொள்ளுங்கள்.
வீணாக மாணவ மாணவிகளின் எதிர்காலம் கேள்விக் குறியாகி விடும்.இந்த பள்ளியின் நிர்வாகிகள் நமதூரில் உள்ள முக்கியஸ்தர்களை கலந்து ஆலோசித்து மேற்கொண்டு என்ன செய்யலாம் என்று மஷூரா செய்து ஆவன செய்து கொள்ளுங்கள். மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் அவர்களின் கடிதத்துக்கு மதிப்பு கொடுத்து நடந்து கொள்ளுங்கள்.
நெருப்பின் மீது பஞ்சு பறந்து விழுந்தாலும் பஞ்சின் மீது நெருப்பு பறந்து வந்து விழுந்தாலும் பாதிப்பு பஞ்சுக்குதான் என்று ஒரு பழ மொழி சொல்வார்கள்.
பள்ளி நிர்வாகிகள் வேகப்படாமல் ஆத்திரப் படாமல் விவேகத்துடனும் அமைதியுடனும் இந்த விஷயத்தை அணுக வேண்டும் என்று சம்பந்த பட்டவர்களை வேண்டி கொள்கிறோம்..
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross