செய்தி: ரமழான் 1437: நகரில் பரவலாகப் பிறை காணப்பட்டதால் இன்று ரமழான் இரவு! ஜூன் 07 செவ்வாய்க்கிழமை முதல் நோன்பு!! மஹ்ழரா, ஜாவியா, நகர உலமாக்கள் கூட்டுக் கூட்டத்தில் அறிவிப்பு!!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...மர்ஹபன் அஹ்லன் வ சஹ்லா.. posted bymackie noohuthambi (kayalpatnam )[06 June 2016] IP: 163.*.*.* Japan | Comment Reference Number: 44015
மர்ஹபா அஹ்லன் வசஹ்லன்.வரலாற்றில் முதன் முதலாக நமது ஊரிலியே தலைப் பிற காணப்பட்டிருக்கிறது என்று நினைக்கிறேன். சந்தேகங்கள் கிள்ளி எறியப்பட்டுள்ளன. அல்ஹம்து லில்லாஹ்.
எல்லாம் வல்ல அல்லாஹ் இந்த சிறப்பான ரமலானில் எல்லோருக்கும் எல்லா நலமும் அருள்வானாக. எல்லா நாட்களிலும் சிறப்பான நோன்பை நோற்று நல் அமல்கள் செய்து வாழ உடல் ஆரோக்கியத்தை தருவானாக.
இரவு வேளைகளில் நின்று தொழுகும் தராவீஹ் தொழுகையை எல்லோருக்கும் நசீபாக்கி வைப்பானாக. மிகவும் பெறுமதி வாய்ந்த சஹர் வேளையில் நமது எண்ணங்களை திசை திருப்பும் சஹர் நேர விசேஷ ஒளிபரப்பில் நம் கவனங்கள் திரும்பாமல், தஹஜ்ஜத் தொழுகை, குர் ஆன் திலாவத், கண்மணி நாயகம் அவர்கள் மீது அதிகம் அதிகம் சலவாத்து சொல்லுதல், அல்லாஹ்விடம் பாவ மன்னிப்பு தேடுதல், இம்மை மறுமை நல்வாழ்வுக்காக இறைஞ்சுதல், ஏழைகளுக்கு குடும்பத்தினருக்கு நம்மால் ஆன உதவிகளை செய்வதற்கு அவனது க்ஹஜானாவிலிருந்து அள்ளித் தரும்படி அவனை வேண்டுதல் போன்ற எல்லா நல் அமல்கள் செய்வதற்கு அருள் புரிவானாக.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross