செய்தி: தம்மாம் கா.ந.மன்றம் & இக்ராஃ இணைந்து - கோடை விடுமுறையில் ஆங்கில பேச்சுப் பயிற்சி வகுப்பு! திரளான மாணவர்கள் பயன்பெற்றனர்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...எல்லைகள் இல்லா உலகம் என் எண்ணமும் அதுபோல் விளங்கும்... posted bymackie noohuthambi (kayalpatnam )[17 June 2016] IP: 163.*.*.* Japan | Comment Reference Number: 44050
நமதூர் மக்கள் கல்வியில் முன்னேற எதிர்காலத்தில் வளமான வாழ்வை அமைத்துக் கொள்ள கடல் கடந்து வாழும் காயல்பட்டினம் உடன்பிறப்புக்கள் என்னவெல்லாம் செய்கிறார்கள். இணையதளங்களை சொடுக்கி பார்த்தால் எவ்வளவு செய்திகள் சுபுஹானல்லாஹ்.
இக்ரா தோன்றிய காலம் முதல் இந்த வெளிநாடு வாழ் காயல் நலமன்றங்கள் செய்கின்ற கல்வி சேவை இங்கு மக்களுக்கு எவ்வளவு விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது என்பதை இங்கு அதன் பயனை அனுபவித்துக் கொண்டு முன்னேறி வாழ்க்கையில் வளமாக வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் தங்கள் கருதுக்களை பதிவு செய்ய வேண்டும். அப்போதுதான் இதற்காக உழைப்பவர்களின் மனங்களில் தாங்கள் செய்யும் உதவி முயற்சி சரியான திசை நோக்கி சென்று கொண்டிருக்கிறது என்ற ஆத்ம திருப்தியும் இன்னும் செய்ய வேண்டும் என்ற உந்துதலும் ஆர்வமும் அதிகரிக்கும்.
சில வேளைகளில் நமக்கு விரக்தியும் வருகிறது. இவ்வளவு வசதி வாய்ப்புகள் மாணவ மாணவிகளின் காலடியில் வந்து விழுந்தும் அவற்றை பயன்படுத்திக் கொள்ளாமல் இருக்கிறார்களே என்ற ஆதங்கம் ஏற்படுகிறது. இலவசங்களின் பரிணாமமும் அதுதான். எங்கே என்ன பொருள் இலவசமாக கிடைக்கிறதோ அதற்கு மதிப்பு இருப்பதில்லை.
PRECIOUS THINGS ARE NOT CHEAP .
CHEAP THINGS ARE NOT PRECIOUS.
எங்களை படிக்க வைக்க எங்கள் பெற்றோர்கள் என்ன பாடு பட்டார்கள். யார் யாரிடமெல்லாம் மடிப் பிச்சை கேட்பதுபோல் கெஞ்சினார்கள். இவனை படிக்கவை, உன் மகளுக்கு இவனை மாப்பிள்ளையாக எடுத்துக் கொள் என்று பெரும் தனவந்தர்களிடம் அவர்கள் தங்கள் மக்கள் படிப்புக்காக ஒரு பெரும் விலை கொடுத்தார்கள் என்பதையும் இப்போது நினைத்துப் பார்க்கிறோம்.
கடந்த கால கசப்பான அனுபவங்களையும் இந்த இக்ரா உறுப்பினர்கள் நிர்வாகத்தினர் காயல்நல மன்ற உறுப்பினர்கள் இந்த புதிய தலைமுறைக்கு எடுத்து சொல்ல வேண்டும். அல்லாஹ் உங்கள் எல்லோரையும் சிறப்பாக்கி வைப்பானாக நீங்கள் கல்விக்காக செலவு செய்யும் ஒவ்வொரு பைசாவும் சதகதுன் ஜாரியாவாக உங்கள் செய்லேட்டில் எழுதப்படும் என்பதில் ஐயமில்லை.
அன்ன சத்திரம் ஆயிரம் கட்டுதல்
ஆலயம் பதினாயிரம் அமைத்தல்
அன்னயாவினும் புண்ணியம் கோடி ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல் என்று தமிழ் நூல்கள் சொல்லும்.
சிறைபிடிக்கப் பட்ட கைதிகளை விடுதலை செய்ய அவர்கள் தங்களுக்கு தெரிந்த சில சூராக்களை மற்றவர்களுக்கு கற்றுக் கொடுக்க வேண்டும் . திருமண பெண்ணுக்கு மகர் கொடுக்க முடியாத நிலையில் உள்ளவர்கள் தான் மணக்கவிருக்கும் பெண்ணுக்கு திருமறையை ஓதிக் கொடுப்பதையே மகராக அறிவித்த நபிகள் நாயகம் இந்த கல்விக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுத்தார்கள் என்பதை எண்ணிப் பார்க்கிறோம். உலகக் கல்வி மார்க்கக் கல்வி என்று இரண்டுவிதமாக பிரித்துப் பார்க்கும் காலம் இது ஆனால் இரண்டும் ஒன்றாகவே பிரிக்க முடியாமல் இரண்டறக் கலந்துதான் இருக்க வேண்டும் என்பதுதான் நபி வழி. அரபி அல்லாதவர்களுக்கு இஸ்லாத்தை அறிமுகப் படுத்த வேற்று மொழிகளை கற்கும்படி நபி தோழர்களை நபிகள் நாயகம் வற்புறுத்திய செய்திகளை உலமாக்கள் சொல்லி காட்டுகிறார்கள். பணத்தை செலவழிப்பதைவிட இப்படி நேரத்தை ஒதுக்கி சேவை செய்வதற்கு ஒரு தியாக உள்ளம் வேண்டும் என்பதை மறுக்க முடியாது.
எனவே பெற்றோரும் இந்த விஷயத்தில் அக்கறை செலுத்தி காயல்நல மன்றங்கள் இக்ரா இணைந்து நடத்தும் இந்த அரிய நிகழ்சிகளில் தங்கள் மக்கள் கலந்து பயனடைய வேண்டும் என்று அவர்களை தூண்ட வேண்டும். அவர்கள் முயற்சிகளுக்கு அங்கீகாரம் வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொள்வதுடன் உங்கள் நல்ல முயற்சிகளுக்கு அல்லாஹ் என்றும் துணை நிற்பானாக என்று து ஆ செய்கிறோம்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross