செய்தி: சி-கஸ்டம்ஸ் சாலையை - PAVER BLOCK முறைக்கு பதிலாக, தார் சாலையாக போடுவது குறித்து நகர்மன்றத் தலைவர், துணைத் தலைவர், உறுப்பினர்கள் மற்றும் ஆணையர் ஆகியோரிடம் மனு! நடப்பது என்ன? WhatsApp குழுமம் ஏற்பாடு!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...முடவன் கொம்புத்தேனுக்கு ஆசைப்பட்ட கதைதான்,,, posted bymackie noohuthambi (kayalpatnam )[19 June 2016] IP: 163.*.*.* Japan | Comment Reference Number: 44070
கடந்த 4 ஆண்டுகாலங்கள் ஆகிறது புதிய நகராட்சி செய்த சாதனைகள் என்ன என்ற பட்டியல் இட்டால் ஏமாற்றம்தான் விடையாக கிடைத்திருக்கிறது.
கூட்டங்கள் கூடுவதும் எதிர்கூட்டங்கள் கூடுவதும் கலைவதுமாகவே நடந்து முடிந்த கூட்டங்களினால் என்ன பயன் ஏற்பட்டுள்ளது. ஏதாவது நடந்தால் சரிதான் என்று ஆகிவிட்டது. எந்த சாலையாவது போட்டு ஊரில் முதியவர்கள் தாய்மார்கள் ஒழுங்காக நடமாட ஆட்டோக்கள் தடுமாறாமல் ஓடி ஒழுங்காக வீடு போய் சேர ஆவன செய்தால் போதும் இன்னும் சில மாதங்களில் மீண்டும் ஊராட்சி தேர்தல் நடக்கவிருக்கும் நிலையில் இதெல்லாம் சாத்தியமா என்று தெரியவில்லை.
சிங்கபூராக சென்னையை மாற்றுவோம் என்று சொன்னார்கள். சிங்கப்பூர் இப்படி மாறியதற்கு அங்கு ஏற்பட்ட தலைமை ஆட்சி மாற்றம் உறுதியான நடவடிக்கைகள் தான் காரணம் என்ற தகவல் கிடைக்கிறது.
நமது நாட்டில் அதை செய்ய முடியுமா. ஜனநாயக நாடு என்றாலும் எதையும் எதிர்த்து நீதிமன்றத்துக்கு போகும் நிலை சிவப்பு நாடா முறை, அரசியல் செல்வாக்கு அழுத்தம் இவை எல்லாம் நிறைந்திருக்கும் நம் நாட்டில் எதுவுமே சாத்தியம் இல்லை என்ற முடிவுக்கு வந்து விரக்தியின் விளிம்பில் மக்கள் இருக்கிறார்கள். ஏதாவது செய்யுங்கள் என்றுதான் சொல்ல தோன்றுகிறது.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross