காயல்பட்டினம் அல் ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ பள்ளி முனையில் இருந்து கடற்கரை பூங்காவை இணைப்பது சி-கஸ்டம்ஸ் சாலையாகும். 750 மீட்டருக்கும் சற்று கூடுதலான நீளம் கொண்ட இந்த சாலை, பேருந்து போக்குவரத்து கொண்ட சாலைகளுக்கு அடுத்து, நகரின் மிக முக்கியமான
சாலையாகும்.
மிக முக்கிய மற்றும் அதிக போக்குவரத்து நிறைந்த இச்சாலையில் - PAVER BLOCK சாலையைப் புதிதாக அமைக்க நகர்மன்றத்தில் தீர்மானம்
நிறைவேற்றப்பட்டு, டெண்டர் விடப்பட்டு, எதிர்வரும் கூட்டத்தில் அதற்கு ஒப்புதல் கொடுக்கும் நிலையை எட்டியுள்ளது.
சாலையின் நீளத்தையும், பயன்பாட்டையும் கணக்கில் கொண்டால் - தரமான, தார் சாலைதான், சி-கஸ்டம்ஸ் சாலைக்கு மிகவும் பொருத்தமாக
இருக்கும் என பல பொது நல அமைப்புகள், தன்னார்வலர்கள் கருத்து தெரிவித்து வந்துள்ளனர்.
நகரின் நலனைக் கருத்திற்கொண்டு, நகர்மன்றத்தின் Paver Block சாலை முடிவை வாபஸ் பெறும்படியும், சி-கஸ்டம்ஸ் சாலையில் தரமான
தார் சாலையைப் புதிதாக அமைத்திட ஆவன செய்யுமாறு வலியுறுத்தியும் - பொது மக்கள், பொது நல அமைப்புகளிடம் கையெழுத்து பெறும் பணி
துவக்கப்பட்டுள்ளது.
இந்த முயற்சியை - நடப்பது என்ன? என்ற WHATSAPP குழுமம் ஒருங்கிணைக்கிறது.
காயல்பட்டினம் நகர்மன்றத்தின் கூட்டம் அடுத்த சில
தினங்களில் எதிர்ப்பார்க்கப்படுவதால், சி-கஸ்டம்ஸ் சாலையில் தார் சாலை அமைக்க தங்கள் ஆதரவை - பொது மக்களும், பொது நல
அமைப்புகளும் துரிதமாக வழங்கும்படி இந்த குழுமத்தின் நிர்வாகிகளில் ஒருவரான எஸ்.ஏ. முஹம்மது நூஹு கேட்டுக்கொண்டுள்ளார்.
change.org என்ற உலகளவில் பிரபலமான இணையதளத்தின் உதவிக்கொண்டு, இணையத்தில் ஆதரவு கையெழுத்துக்கள் பெறப்பட்டு வருகின்றன.
இணையம் வழியாக மனுவில் கையெழுத்திட விரும்புவோர் கீழ்க்காணும் முகவரியை பயன்படுத்தலாம்:
https://goo.gl/ZDxFBU
|