Re:...இனிப்பான கசப்பு மாத்திரை posted bymackie noohuthambi (kayalpatnam )[23 June 2016] IP: 163.*.*.* Japan | Comment Reference Number: 44107
நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலுக்கு முன்னர் வரை இந்த இயக்கம் ஒரு சமுதாய இயக்கமாக இஸ்லாமிய சமுதாயத்துக்கு சேவை செய்யும் இயக்கமாகத்தான் பார்த்தோம். ஆனால் கலைஞர் தங்கள் கேட்ட இடங்களை தரவில்லை என்றவுடன் அந்த சமுதாய பார்வை மாறி ஆட்சி அதிகாரத்தை நோக்கி செல்லும் அரசியல்கட்சிகள் ஒன்றுதான் இந்த கட்சியும் என்ற முடிவுக்கு வந்தோம்.
காயல்பட்டினத்தை சேர்ந்த ஒருவர் கடையநல்லூரில் போட்டி இடுகிறார்கள் பாரம்பரியம் மிக்க முஸ்லிம் லீக் கட்சியின் சார்பாக என்று தெரிந்திருந்தும் அவருக்கு எதிராக தாங்களும் ஒரு முஸ்லிமை அந்த களத்தில் இறக்கி 5000 வாக்குகளை காவு கொண்டு சென்றவர்களை காயல்பட்டினம் மக்கள் எப்படி தூக்கிப் பிடிக்கிறார்கள் அவர்களுக்கு கொடி தூக்குகிறார்கள் என்பது ஆச்சரியமாக உள்ளது.
ஆனாலும் நமதூர் மக்கள் எப்போதெல்லாம் புதிய கட்சிகள் புற்றீசல்கள் போல் புறப்படுகின்றதோ அதிலெல்லாம் தாங்களும் அங்கத்தினர்களாக இருப்பார்கள் இதில் என்ன கொள்கை கோட்பாடு வாழுகிறது என்று நீங்கள் சொல்வது காதில் விழுகிறது.
திமுக இடம் தரவில்லை என்றால் அதிமுகவிடம் இடம் கேட்டு இரட்டை இலை சின்னத்தில் நின்று சட்டமன்றத்துக்கு போகமாட்டீர்களா... நீங்கள் எல்லாம் இந்த சமுதாயத்துக்கு சேவை செய்வீர்கள் என்பதை நடுநிலையாளர்கள் இனியும் எண்ணிப் பார்க்க மாட்டார்கள். .
எத்தனையோ அரசியல் கட்சிகள் சமுதாய இயக்கங்கள் முளைவிட்டுள்ளன கிளைவிட்டுள்ளன அத்தோடு இது ஒன்று பத்தோடு பதினொன்று....
காசிருந்தால் தான் சுண்டச் சொல்லும்
கண்டவர் வாயை கிண்டச்சொல்லும்
ஏறுக்கு மாறா பேச சொல்லும்...
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross