விழிப்புணர்வு கிழக்கிலிருந்து உதிப்பதாக உணர்கிறேன் posted byN.S.E.மஹ்மூது ( காயல்பட்டணம்)[02 July 2016] IP: 59.*.*.* India | Comment Reference Number: 44146
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
மாதாந்திர பராமரிப்பு என்று ஒவ்வொரு மாதமும் மின் தடை செய்கிறார்கள் – என்ன அடிப்படையில் மின் தடை செய்கிறார்கள் என்பது யாருக்கும் தெரியாது. பராமரிப்புக்காக மின் தடை என்று அறிவிப்பு செய்யும்போது ஒவ்வொரு முறையும் (எல்லா மாதமும்) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்றுதான் அறிவிப்பு செய்கிறார்கள்.
காலை 9 மணி என்பது 9.15 / 9.20 என்று தாமதமாக மின் விநியோகத்தை தடை செய்து ஏதோ மக்களுக்கு சலுகை செய்வது போல் நடந்து கொள்வார்கள் ஆனால் பராமரிப்பு முடிந்து சரியாக 5 மணி அல்லது 15 , 20 நிமிடம் தாமதமாகவோ மின் விநியோகம் செய்வார்களா! என்றால் அதுதான் இல்லை. எப்போதுமே 5 மணிக்கு மேல்தான் 5.30 அல்லது 6.00 மணிக்குதான் மின் விநினியோகமிருக்கும்.
மின் தடை 9 மணியிலிருந்து 2 மணி வரை என்று அறிவித்தவர்கள் சரியாக 2 மணிக்கு மின் தடையை நீக்க வேண்டும் – ஏதோ ஒரிருமுறை தவிர்க்க முடியாத காரணத்தால் கால தாமதம் ஏற்படலாம் – அதை குறை சொல்வதற்கில்லை. ஆனால் ஒவ்வொரு முறையும் 5 அல்லது 6 மணிக்குதான் மின் தடையை நீக்குகிறார்கள் என்றால் நிச்சயமாக இது திட்டமிட்ட செயலே!
------------------------------
நேற்று மின் தடை முன் அறிவிப்பு இல்லாதது மற்றும் மிகவும் தாமதமாக இரவு சரியாக 7 மணிக்குதான் மின்சாரம் வந்தது – இதனால் காயல்பட்டணத்து மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் – நோன்பு பிடித்துக்கொண்டு, மின்சாரமில்லாமல் உறங்கவும் முடியவில்லை, ஓதவும் முடியவில்லை.
நோன்பு பிடிக்க, திறக்க தேவையான பொருட்களை ஐஸ் பெட்டியில் வைக்கவும் முடியவில்லை. பெருநாள் நேரம் நெருங்கிவிட்டதால் டெய்லர்கள் துணியை தைப்பதற்கு சிரமப்படுகிறார்கள் – ஒருநாள் மின் தடையினால் பல நூறு துணிகள் தேங்கிவிட்டதாக பிரபல்யமான டெய்லர்கடை அதிபர் சொல்கிறார்.
இன்று வெள்ளிக் கிழமை ஜும்மாவுக்கு போக்கூட துணிகளை அயர்ன் பண்ணமுடியவில்லை. மொத்தத்தில் காயல்பட்டணத்து மக்களின் கொதிப்பை சம்பந்தப்பட்டவர்கள் உணர்வதாக தெரியவில்லை – மின்வாரியம் வேண்டும் என்றே திட்டமிட்டு இந்த தடையை செய்திருந்தால் அதற்கான கூலியை அவர்களுக்கு இறைவன் விரைவில் கொடுப்பான்.
----------------------------
காயல்பட்டணத்து மின் வாரியத்தை பொறுத்தவரை (பிரத்தியேகமான) தனி சட்டங்களுடன் இயங்குகிறது. எப்படி ஜம்மு - காஷ்மீருக்கு இந்தியாவின் மற்ற மாநிலங்களில் உள்ள சட்டங்கள் பொருந்தாதோ! அதுபோல் தமிழ்நாடு மின்வாரியத்தின் 9 மண்டலங்களிலும் பின் பற்றுகிற சட்டம் காயல்பட்டணம் மின் வாரியத்திற்கு பொருந்தாது – ஏன் 9 மண்டலம், தூத்துக்குடி மின் பகிர்மான சட்டம் கூட, காயல்பட்டணம் மின் வாரியத்திற்கு பொருந்தாது. இது தனி அந்தஸ்து பெற்ற வாரியம் என்பது எத்தனை மக்களுக்கு தெரியும்?.
இந்த சட்டத்தை உடைக்க வேண்டுமானால் மக்களின் விழிப்புணர்வு அவசியம் தேவை – அந்த விழிப்புணர்வு கிழக்கிலிருந்து உதிப்பதாக உணர்கிறேன். அது வெற்றி பெற வாழ்த்துகிறேன்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross