செய்தி: வரும் உள்ளாட்சித் தேர்தலில் நகர்மன்றத் தலைவர், உறுப்பினர் பொறுப்புகளுக்குப் போட்டியிடுவதென இ.யூ.முஸ்லிம் லீக் ஊழியர் கூட்டத்தில் தீர்மானம்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
கட்சி என்றில்லாமல் சுயேட்சையாக நின்று ... posted byN.S.E.மஹ்மூது (காயல்பட்டணம்)[16 July 2016] IP: 59.*.*.* India | Comment Reference Number: 44258
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).
வரும் உள்ளாட்சித் தேர்தலில் நகர்மன்றத் தலைவர் மற்றும் உறுப்பினர் பொறுப்புகளுக்குப் போட்டியிடுவதென தாய் சபையின் காயல்பட்டணம் ஊழியர்கள் கூட்டத்தில் தீர்மானம் கொண்டு வந்திருக்கிறீர்கள் – இது வரவேற்கக் கூடிய விசயமாக தெரிய வில்லை.
------------------------------
இன்றைய நாளில் தாய் சபையின் செயல்பாடுகள் அற்புதமாகவும், வேகமும்,விவேகமும் கூடியதாகவும் இருக்கிறது என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. நிறைய விசயங்கள் பாராட்டுக்குரியதாகவும், தொலைநோக்கு பார்வையிலும் செயல்பட்டுக்கொண்டு இருக்கிறது என்பதை காணமுடிகிறது – அல்ஹம்துலில்லாஹ்!.
------------------------------
எவ்வளவுதான் அரசியலில் தொலைநோக்கு பார்வையை செலுத்தி காலத்தின் கட்டாயம் இது என்று இந்த முடிவை எடுக்க நினைத்திருந்தாலும் – நமது ஊர், நமது கலாச்சாரம், நமது பாரம்பரியம் காக்கப்பட வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கி இருந்தால் நிச்சயமாக – இந்த முடிவு ஏற்பட்டிருக்காது.
----------------------------
இதுவரை நம் ஊரில் உள்ளாட்சி தேர்தலில் அரசியல் கட்சிகள் போட்டியிட்டதில்லை , இனிமேலும் நம் ஊருக்கு அது வரக்கூடாது என்பதுதான் நல்லது. அரசியல் கட்சிகள் நம் ஊர் உள்ளாட்சி தேர்தலில் களம் இறங்கினால் – நமது கொள்கை, கோட்பாடுகள், குறிக்கோள்கள் அனைத்தும் சீரழிந்து போகும் – தேர்தலில் அல்ல, தேர்தலுக்குப்பின் படிப்படியாக நாசமாகும் என்பதை எச்சரிக்க விரும்புகிறேன்.
----------------------------
இன்று தாய் சபை களத்தில் இறங்கனால் இன்ஷா அல்லாஹ்! வெற்றி பெறும் அதில் சந்தேகமில்லை – ஆனால் எப்போதுமே தாய் சபை நின்று வெற்றி பெற்றிட முடியுமா? கூட்டு, குருமா என்று மற்ற தேர்தலில் நிற்கின்றோமே – அந்த கூட்டுக்கட்சிக்கும் வேறொரு முறை விட்டுக்கொடுக்க வேண்டியது வருமே! – அப்போது என்னவாகும் நமது கலாச்சாரங்கள்!!
------------------------------
சொல்ல வேண்டியது பலதும் உண்டு ஆனால் அவையெல்லாம் எழுத்தில் எழுத முடியாது – ஆகவே! சிந்திக்க, சிந்திக்க சிந்தனையில் சீரான முடிவு கிடைக்கும் என்பதை தங்களது சிந்தனைக்கே விட்டுவிடுகிறேன் – சீரான முடிவை எடுத்து நமது ஊர் மக்களின் சுபிட்சமான வாழ்வுக்கு வழி காட்டுங்கள்.
-----------------------------
அரசியல்தான் வேண்டாம் என்கின்றேனே! தவிர, தாய்சபையினர் நகராட்சிக்கு வரவேண்டாம் என்று சொல்லவில்லை. ஆகவே, தலைவர் மற்றும் உறுப்பினர்கள் என்று 18 வார்டுக்கும் கட்சி என்றில்லாமல் சுயேட்சையாக நின்று போட்டியிட்டு வெற்றி பெற்று நல்லாட்சியை தாருங்கள் – அல்லாஹ்! நம் மக்கள் அனைவருக்கும் ரஹ்மத் செய்வானாக ஆமீன்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross