வரும் உள்ளாட்சித் தேர்தலில், காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர், உறுப்பினர் பொறுப்புகளுக்குப் போட்டியிடுவதென இந்திய யூனியன் முஸ்லிம் லீக் காயல்பட்டினம் நகர கிளை ஊழியர் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, அக்கட்சியின் தூத்துக்குடி மாவட்ட செய்தி தொடர்பாளர் ஏ.ஆர்.ஷேக் முஹம்தம் வெளியிட்டுள்ள அறிக்கை:-
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் காயல்பட்டணம் நகர ஊழியர் கூட்டம், 10-07-2016 ஞாயிற்றுக்கிழமை இரவு 07.00 மணியளவில், மாநில பொதுச் செயலாளர் கே.ஏ.எம்.முஹம்மது அபுபக்கர் MLA தலைமையில், மாநில துணைச் செயலாளர் எஸ்.ஏ.இப்ராஹிம் மக்கி முன்னிலையில், காயல்பட்டணம் சதுக்கைத் தெருவிலுள்ள நகர அலுவலகமான தியாகி பி.எச்.எம்.முஹம்மது அப்துல் காதிர் மன்ஸிலில் நடைபெற்றது.
அரபி எம்.எம்.சாஹுல் ஹமீது கிராஅத் ஓதி கூட்டத்தைத் துவக்கி வைத்தார். நகர செயலாளர் ஏ.எல்.எஸ்.அபுசாலிஹ் வரவேற்புரையாற்றினார். மாவட்டத் துணைத்தலைவர் மன்னர் ஏ.ஆர்.பாதுல் அஸ்காப் அறிமுகவுரையாற்றினார்.
மாநில துணைச் செயலாளர் எஸ்.ஏ.இப்ராஹிம் மக்கி, தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் எஸ்.ஜெ.மஹ்மூதுல் ஹசன், மாவட்ட துணைச் செயலாளர் பெத்தபா எம்.ஏ.சி.சுல்தான், சீனா காயிதே மில்லத் பேரவை அமைப்பாளர் பி.எஸ்.என்.அஹ்மது ஜரூக், 7-வது வார்டுத் தலைவர் என்.டி.முஹம்மது இஸ்மாயில் புஹாரி, செயலாளர் கே.வி.ஹெச்.எம்.மஹ்மூது ஜிஃப்ரீ, 3-வது வார்டு மாவட்ட பிரநிதிகள் எம்.கே.முஹம்மது அலி (ஹாஜி காக்கா), எம்.டி.ஏ.முஹம்மது முஹியத்தீன் மற்றும் 2-வது வார்டு செயலாளர் எம்.ஜெட்.சித்தீக், 18-வது வார்டுத் தலைவர் எஸ்.ஆர்.ரஹ்மதுல்லாஹ், 10-வது வார்டு மாவட்ட பிரநிதி எம்.ஹெச்.அப்துல் வாகித், உறுப்பினர் அதுகம் ஆகியோர் கருத்துரையாற்றினர்.
நிறைவாக, மாநில பொதுச் செயலாளரும், கடைநல்லூர் சட்டமன்ற உறுப்பினருமான கே.ஏ.எம்.முஹம்மது அபுபக்கர், தற்போதைய அரசியல் நிலவரம் குறித்தும், வரும் உள்ளாட்சி மன்ற தேர்தலில் ஊழியர்கள் செய்யவேண்டிய பணிகள் குறித்தும் விளக்கமாக உரைநிகழ்த்தினார்.
அன்மையில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில், கடையநல்லூர் சட்டமன்ற தொகுதியில் களம் கண்டு வெற்றிவாகை சூடிய, மாநில பொதுச் செயலாளர் கே.ஏ.எம்.முஹம்மது அபுக்கர் MLA வுக்கு, நகர கிளையின் சார்பில் வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.
கூட்டத்தில் கீழ்கானும் தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன:-
தீர்மானம் 1 – காயல்பட்டணம் நகரசபை தலைவர் மற்றும் கவுன்சிலர் பதவிகளுக்கு போட்டியிடுவது:-
விரைவில் நடைபெறவுள்ள, உள்ளாட்சி மன்றத் தேர்தலில், காயல்பட்டணம் நகரசபை தலைவர் மற்றும் 12 கவுன்சிலர் பதவிகளுக்கு, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பாக போட்டியிடுவதென ஒருமனதாக முடிவு செய்யப்பட்டது.
தீர்மானம் 2 – முஸ்லிம் லீக் போட்டியிட கூடிய வார்டுகளை கண்டறிய ஐவர்குழு:-
காயலபட்டணம் நகராட்சியில் தற்போதுள்ள 18 வார்டுகளில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் போட்டியிட வாய்ப்பு உள்ள வார்டுகளை கண்டறிய கீழ்கானும் ஐவர்குழு அமைக்கப்பட்டது.
1. மாவட்ட துணைத் தலைவர் மன்னர் ஏ.ஆர்.பாதுல் அஸ்காப் (ஒருகிணைப்பாளர்)
2. மாவட்ட செயலாளர் எஸ்.ஜெ.மஹ்மூதுல் ஹசன்
3. மாவட்ட துணைச் செயலாளர் பெத்தப்பா எம்.ஏ.சி.சுல்தான்
4. நகர செயலாளர் ஏ.எல்.எஸ்.அபுசாலிஹ்
5. 7-வது வார்டுத் தலைவர் என்.டி.முஹம்மது இஸ்மாயில் புஹாரி
இக்குழுவினர் காயல் நகரின் அனைத்து பகுதி ஜமாஅத்தினர் மற்றும் பொது மக்களிடம் கலந்து பேசி, நாம் வெற்றிபெற கூடிய வார்டுகளை கண்டறிந்து, அதன் அறிக்கையை இரண்டுவார காலத்துக்குள் சமர்பிக்க இக்கூடம் கேட்டு கொள்கிறது.
தீர்மானம் 3 – உள்ளாட்சியில் நல்லாட்சி பிரகடனம், காயலின் முதல் சட்டமன்ற உறுப்பினருக்கு பாராட்டு விழா:-
ஆகஷ்ட் மாதம் முதல்வாரத்தில் உள்ளாட்சியில் நல்லாட்சி பிரகடனம் மற்றும் காயலின் முதல் சட்டமன்ற உறுப்பினருக்கு பாராட்டு விழா பொதுக்கூட்டம் நடத்துவதென முடிவு செய்யப்பட்டது.
இக்கூட்த்தில் மேற்கண்ட, தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
எஸ்.கே.சாலிஹ் நன்றி கூற, 4-வது வார்டுச் செயலாளர் கே.எம்.என்.உமர் அப்துல் காதர் துஆவுடன் கூட்டம் நிறைவுற்றது.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இ.யூ.முஸ்லிம் லீக் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |