காயல்பட்டினம் அரசு மருத்துவமனையில், நிகழும் ஜூலை 11ஆம் நாள் முதல் 28ஆம் நாள் வரை, வயிற்றுப் போக்கு, காய்ச்சல் ஆகியன குறித்த விழிப்புணர்வு முகாம் நடத்தப்படுகிறது.
தலைமை மருத்துவர் ராணி உள்ளிட்ட மருத்துவர்கள், இந்நோய்கள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வூட்டும் வகையில் உரையாற்றுவதுடன், அவை குறித்த சந்தேகங்களுக்கும் விளக்கமளித்து வருகின்றனர்.
இதனைப் பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
தகவல் & படங்கள்:
H.ஷம்சுத்தீன்
அரசு மருத்துவமனை தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
|