காயல்பட்டினம் துளிர் சிறப்புக் குழந்தைகள் பள்ளியின் - வெளிநாடு வாழ் அபிமானிகள் கலந்தாலோசனைக் கூட்டத்தில், பள்ளியில் பயிற்சி பெறும் மாற்றுத் திறனாளிகளுக்கு நலத்திட்டப் பொருட்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளது. கூட்டம், 09.07.2016. சனிக்கிழமையன்று 11.00 மணியளவில், துளிர் கூட்டரங்கில் நடைபெற்றது.
ஹாங்காங் வாழ் காயலர்கள் ஏ.எஸ்.ஜமால், ஹபீப் ஷகீல், சிங்கப்பூர் வாழ் காயலர் சாளை நவாஸ், சென்னையிலிருந்து மொகுதூம், துபை வாழ் காயலர் அனீஸ் அஹ்மத், உள்ளூர் பிரமுகர்கள் பலர் கலந்துகொண்ட இக்கூட்டத்தில், துளிரின் வளர்ச்சி, அதன் செயல்பாடுகள் குறித்து விவாதிக்கப்பட்டு, ஆலோசனைகள் வழங்கப்பட்டன.
நலத்திட்ட உதவிகள்:
இக்கூட்டத்தின்போது, மாற்றுத்திறனாளியருக்காக சக்கர நாற்காலி, பிட்யூட்டரி சுரப்பி இயக்கத்திற்கான ஊசி மருந்து, இன்சுலின் & சர்க்கரை நோய் பரிசோதனைக் கருவி, இன்சுலின் செலுத்தப் பயன்படும் பேனா ஊசி, நடை உபகரணம் ஆகிய பொருட்களும், காயல்பட்டினத்தைச் சேர்ந்த - ஏழ்மை நிலையிலிருக்கும் - இயலாநிலையிலுள்ள குழந்தைகளற்ற தம்பதியருக்கு 25 கிலோ அரிசியும் துளிர் அறக்கட்டளை சார்பில் வழங்கப்பட்டது.
கூட்டத்தில் பங்கேற்ற பலர் வருடச் சந்தா தர வாக்களித்தனர். வெளிநாடுகளில் துளிருக்காக செயல்பட இசைவு தெரிவித்துள்ள துளிர் பிரதிநிதிகள் பெயர் பட்டியல்:-
நிகழ்ச்சி ஏற்பாடுகளை, துளிர் அறக்கட்டளை தலைவர் வழக்குரைஞர் அஹ்மத், செயலாளர் எம்.எல்.ஷேக்னா லெப்பை, பொறுப்பாளர் சித்தி ரம்ஸான் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.
தகவல் & படங்கள்:
சித்தி ரம்ஸான்
(அலுவலகப் பொறுப்பாளர் - துளிர் அறக்கட்டளை)
துளிர் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |