காயல்பட்டினம் நெய்னார் தெருவில், பெரிய குத்பா பள்ளி அருகில் உள்ள வேப்பமரத்தின் கிளையொன்று, இன்று மதியம் வீசிய காற்றில் 14.30 மணியளவில் திடீரென முறிந்து விழுந்தது. இதில், மரத்தின் கீழிருந்த இரு சக்கர வாகனம் ஒன்றில் சிறிது சேதம் ஏற்பட்டது. வேறு சேதங்கள் எதுவும் இல்லை.
தகவலறிந்து, அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்களும், ஏ.கே.முஹம்மத் முகைதீன், ஏ.ஏ.அபூபக்கர் அஜ்வாத் ஆகிய நகர்மன்ற உறுப்பினர்களும் நிகழ்விடம் வந்து, முறிந்து விழுந்த மரக்கிளையை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.
வழமையாக அம்மரத்தின் கீழ் நுங்கு வணிகர் ஒருவர் அமர்ந்து வணிகம் செய்து வருவார். இன்று ஞாயிற்றுக்கிழமையாதலால் அவர் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தகவல்:
குளம் M.I.பஷீர் அலீ
|