காயல்பட்டினம் தாயிம்பள்ளி ஜமாஅத்தைச் சேர்ந்த மாணவ-மாணவியருள் 10ஆம், 12ஆம் வகுப்பில் முதல் 3 மதிப்பெண்கள் பெற்றோருக்கு, தாயிம்பள்ளி ஜமாஅத் கல்வி நல அமைப்பு (Thaimpalli jamath Education Welfare Association - TEWA) சார்பில் பரிசளிப்பு விழா, 17.07.2016. ஞாயிற்றுக்கிழமையன்று, 17.00 மணியளவில், தாயிம்பள்ளி வெளி வளாகத்தில் நடைபெற்றது.
பள்ளி தலைவர் எஸ்.டீ.வெள்ளைத்தம்பி, பொருளாளர் கே.எம்.தவ்லத், நிர்வாகி எம்.எம்.அஹ்மத், எஸ்.இ.மரைக்கார் ஆலிம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பள்ளியின் இமாம் எம்.எல்.அஹ்மத் காஸிம் கிராஅத் ஓதி துவக்கி வைத்தார். ‘கொமந்தார்’ கே.எம்.எஸ்.செய்யித் இஸ்மாஈல் வரவேற்றுப் பேசினார்.
‘மக்கா’ எம்.ஏ.செய்யித் இப்றாஹீம் நிகழ்ச்சிகளை நெறிப்படுத்தியதுடன், தாயிம்பள்ளி ஜமாஅத் கல்வி நல அமைப்பு (Thaimpalli jamath Education Welfare Association - TEWA) குறித்தும், பரிசளிப்பு விழா நிகழ்ச்சி குறித்தும் அறிமுகவுரையாற்றினார்.
நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கிய - காயல்பட்டினம் சமுதாயக் கல்லூரியின் முதல்வர் ஆசிரியர் எம்.ஏ.புகாரீ தலைமையுரையாற்றினார். மவ்லவீ எம்.ஐ.அப்துல் மஜீத் மஹ்ழரீ, விஸ்டம் பப்ளிக் பள்ளியின் தலைவரும், கே.எம்.டீ. மருத்துவமனை அறங்காவலரும், இக்ராஃ கல்விச் சங்கத்தின் மூத்த செயற்குழு உறுப்பினருமான டீ.ஏ.எஸ்.முஹம்மத் அபூபக்கர் ஆகியோர் வாழ்த்துரையாற்றினர்.
இவ்விழாவில், ஓமன் நாட்டின் சுல்தான் கபூஸ் பல்கலைக் கழகத்தின் பேராசிரியரும் - காயலருமான முனைவர் எஸ்.எம்.ஹமீத் சுலைமான் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, மாணவர்கள் தம் கல்வித் தரத்தையும், வாழ்க்கைத் தரத்தையும் மேம்படுத்தத் தேவையான வழிமுறைகள் குறித்து ஊக்கமளிக்கும் வகையில் உரையாற்றினார்.
தொடர்ந்து, தாயிம்பள்ளி ஜமாஅத் அளவில் - 10ஆம், 12ஆம் வகுப்பு அரசுப் பொதுத் தேர்வுகளில் முதல் மூன்றிடங்களைப் பெற்றோருக்கும், 12ஆம் வகுப்பில் 1000 அல்லது அதற்கு மேல் மதிப்பெண் பெற்றோருக்கும் பணப்பரிசுகளும், விருதுகளும் வழங்கப்பட்டன.
அவற்றை, மாணவர்களும், வர இயலாத மாணவ-மாணவியர் சார்பாக அவர்களது உறவினர்களும் பரிசுகளைப் பெற்றுக்கொண்டனர். பரிசு பெற்ற மாணவ-மாணவியர் விபரப் பட்டியல் வருமாறு:-
ப்ளஸ் டூ :
முதலிடம் : S.A.Mohamed Sakiya d/o,marhoom Sadak Abbas, mark:1155/1200
இரண்டாமிடம்: Hafil K.M.Md Abdul Razzak s/o Kaja Mohideen mark : 1152/1200
மூன்றாமிடம்:(இருவர்)
1.A.Rabiya. d/o. Haji. Anwar(boomi gas)Mark 1104/1200
2.M.A.Ameena Musarrafa mark 1104/1200
1000 மதிப்பெண்களுக்கு மேல் பெற்ற மூன்று பேர்
1.S.A.F.Hairun Niha d/o. L.T.Farook. mark : 1094/1200
2.A.H. Haniya zainamb d/o Haji Abul Hasan mark 1079/1200
3.M.S. Ummuhani Mafrooha d/o. Mohamef Sulaiman mark 1051/1200
பத்தாம் வகுப்பு:
முதலிடம் : S.I.Sulaiman Sheikna S/o. K.M.S.Seyed Ismail mark 480/500
இராண்டாமிடம்:S.Nafeesha fareeha d/o. Sugaravarthi mark 469/500
மூன்றாமிடம்: S.A.Fathima Ristha d/o. M.I.Seyed Abbas mark:468/500
எம்.எச்.ஷம்சுத்தீன் நன்றி கூற, கஃப்பாரா துஆவுடன் நிகழ்ச்சிகள் நிறைவுற்றன. இவ்விழாவில், தாயிம்பள்ளி மஹல்லா ஜமாஅத்தினரும், கல்வி ஆர்வலர்களும் திரளாகக் கலந்துகொண்டனர். அனைவருக்கும் தேனீர் - சிற்றுண்டி பரிமாறப்பட்டது.
அனைத்து நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகளையும், தாயிம்பள்ளி ஜமாஅத் கல்வி நல அமைப்பு (Thaimpalli jamath Education Welfare Association - TEWA) அமைப்பின் தலைவர் ஏ.லெப்பை ஸாஹிப் என்ற ஏ.எல்.எஸ். மாமா வழிகாட்டலில், அதன் அங்கத்தினர் செய்திருந்தனர்.
தாயிம்பள்ளி ஜமாஅத் கல்வி நல அமைப்பு சார்பாக...
தகவல்:
D.ஷேக் அப்பாஸ் ஃபைஸல்
தாயிம்பள்ளி ஜமாஅத் கல்வி நல அமைப்பு சார்பில், இதற்கு முன் (2014ஆம் ஆண்டு) நடத்தப்பட்ட கல்விச் சாதனையாளர்களுக்கான பரிசளிப்பு விழா குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
தாயிம்பள்ளி ஜமாஅத் கல்வி நல அமைப்பு தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
|