எழுத்து மேடை மையம், தமிழ் நாடு ஏற்பாட்டில் - எதிர்வரும் வியாழக்கிழமை (ஜூலை 14) அன்று மாலை, நகரில் நூலாய்வு நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பு வருமாறு:
அன்புடையீர்!
அஸ்ஸலாமு அலைக்கும்!
இந்த உலகில் பிறந்து வளரும் ஒவ்வொரு மனிதனுக்கும் தன் மொத்த வாழ்க்கையும் எப்படி அமைய வேண்டும் என்பது பற்றிய ஒரு கனவும் அதையொட்டிய விருப்பங்களும் கட்டாயம் இருந்தே தீரும்.
ஆனால் காலப்போக்கில் அந்த வாழ்க்கை பற்றிய அவனது ஆழ்ந்த கனவும் பெரு விருப்பமும் பல்வேறு சூழ்நிலைகள் நெருக்கடிகள் தடைகள் போன்ற காரணங்களினால் தொலைக்கப்பட்டு விடுகின்றது.
ஆனால் தனக்கான ஒரு வாழ்க்கையை விரும்பியதோடு அது குறித்த கனவுகளுடன் திரிந்த ஒரு மனிதன் எப்படி தனது இலக்கை அடைகின்றான் என்பதை விறுவிறுப்பும், தத்துவமும் கலந்த எளிய நாவல் வடிவத்தில் சொல்கிறது ` THE ALCHEMIST “ (ரஸவாதி) என்ற கதை நூல்.
இந்த நாவல் மீதான விவாதங்களும் உரையாடல்களும் குறும்படங்கள் திரையிடல்களும் நடைபெறவிருக்கின்றது.
காலம்: 14/07/16 வியாழன் , மாலை 04:30 – 06:15 மணி வரை
இடம்: ஹனியா சிற்றரங்கம்,
துஃபைல் வணிக வளாகம்,
ஹாஜி அப்பா பள்ளிவாசல் அருகில்,
மெயின் ரோடு,
காயல்பட்டினம்
அன்றாட வாழ்வின் சலிப்பிலிருந்தும் நெருக்கடிகளிலிருந்து மீண்டு நமக்கு பிடித்தமான ஒரு வாழ்வை மீட்டெடுப்பதில் ஆர்வமுள்ளவர்கள் தவற விடக்கூடாத நிகழ்ச்சி.
அனைவரையும் வரவேற்கின்றோம்.
இப்படிக்கு,
எழுத்து மேடை மையம் தமிழ் நாடு
தொடர்புக்கு : 9171324824
```````````````````````````````````
எழுத்து மேடை மையம் தமிழ் நாடு -- எந்த அமைப்பையும் சாராத சுயேச்சையான சிந்தனைத் தளமாகும்
தகவல்:
சாளை பஷீர்,
ஒருங்கிணைப்பாளர், எழுத்து மேடை மையம், தமிழ் நாடு |