செய்தி: நகரின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் வாட்ஸ்அப் குழு! சமூக வலைதளங்களைப் பயனுள்ளதாக மாற்றிய காயல்பட்டினம் இளைஞர்கள்!! “நடப்பது என்ன?” குழுமத்தைப் பாராட்டி ‘தி இந்து’ தமிழ் நாளிதழ் செய்தி! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...இளையோர் கூட்டம் தலைமை தாங்கும் பூமியே புதிய பூமி posted bymackie noohuthambi (kayalpatnam )[01 August 2016] IP: 163.*.*.* Japan | Comment Reference Number: 44351
இளைஞர்கள்தான் ஒரு சமுதாயத்தை ஒரு நாட்டை வழிநடத்த வல்ல சக்திகள். நபிகள் நாயகம் அவர்கள் இளைஞர்களைத்தான் துணைக்கு அழைத்தார்கள். YA MAUSHARA SHABAAB ...என்று அவர்கள் குரல் ஓங்கி ஒலித்தபோது அந்த வேள்வியில் தங்களை இணைத்துக் கொண்டவர்கள்தான் நபித்தோழர்களாகிய அபூபக்கர், உமர் உதுமான் அலி போன்றவர்கள். அல்லாஹ்வை அவர்கள் பொருந்திக் கொண்டார்கள் அல்லாஹ் அவர்களை பொருந்திக் கொண்டான் என்ற இறை வசனத்துக்கு சொந்தக் காரர்களாக தங்களை புடம் போட்டுக் கொண்டவர்கள்.
நபி அவர்களின் பேச்சிலே இனிமை, தொழிலே நேர்மை பொதுவாழ்விலே தூய்மை ஓரிறைக் கொள்கையிலே ஓர்மை துன்பம் வரும்போது பொறுமை இவைதான் தொடர்ந்து ஒரு மறுமலர்ச்சியை அன்று ஏற்படுத்தியது. அவர்களது இந்த கொள்கைகளை பின்பற்றும் எல்லோருமே வெற்றியாளர்களாக சாதனையாளர்களாக மாறமுடியும். இளைஞர்கள் தலைமைதாங்கும் இயக்கமே வெற்றிகளை குவிக்க முடியும்.
தம்பி வா தலைமை தாங்கவா என்று பேரறிஞர் அண்ணா அவர்கள் நாவலரை அழைத்தார். திருவாரூர் நகரில் கருப்பு சிவப்பு கொடி ஏந்தி வீறு நடை போட்டபோது கலைஞருக்கு வயது என்ன அண்ணாவுக்கு வயது என்ன மகாத்மா காந்தி வெள்ளையனே வெளியேறு என்று சுதந்திர வேட்கை சூத்திரத்தை அறிவித்த போது அவருக்கு வயதென்ன சௌகத் அலி முஹம்மது அலி அவர் பின்னால் அணிவகுத்தபோது அவர்களுக்கு வயதென்ன...இப்படி எல்லோருமே 40 வயதிற்குப்பட்ட இளைஞர்கள்தான்.
துரதிர்ஷ்ட வசமாக இளைஞர்கள் தங்கள் வலிமைகளை தாங்களே குறைத்து மதிப்பிட்டு பின் இருக்கையில் அமர தலைப் பட்டபோது முதியவர்கள் அங்கே முன்னிலை வகிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இப்போது நிலைமை இன்னும் மோசம்.WHATSUPP , கணினி முகநூல் என்ற புது யுகத்தில் காலெடுத்து வைத்தபோது அவற்றில் முகம் புதைத்து தங்கள் இளமையை தொலைத்துக் கொள்கிறார்களே தவிர அதிலிருந்து பயன் பெற இந்த சமுதாயத்துக்கு இந்த நாட்டுக்கு என்ன நல்லவை செய்யலாம் என்று நிமிர்ந்து பார்க்க மறந்து விட்டார்கள்.
காயல்பட்டினத்தில் இப்போது மலர்ந்துள்ள இந்த மாற்றம் வரவேற்கத்தக்கது. ஆனாலும் இளைய தலைமுறை புதிய தலைமுறை முதிய தலைமுறையை அரவணைத்து செல்லவேண்டும் அவர்களது அனுபவங்களை பகிர்ந்து கொள்ளவேண்டும் அவர்களிடம் ஆலோசனைகள் பரிமாறிக் கொள்ள வேண்டும். இளமையின் வேகம் முதுமையின் விவேகம் இவை இரண்டும் இரட்டை குழல் துப்பாக்கியாக செயல்பட ஆரம்பிக்கும்போதுதான் சமுதாயத்தில் மறுமலர்ச்சி ஏற்படும். எல்லாவற்றுக்கும் மேலாக நபிகள் நாயகம் அவர்கள் காட்டி தந்த அணுகுமுறைகள் மேலே சொன்ன இலக்கணங்களை தங்கள் லட்சிய வேட்கையாக கொள்ள வேண்டும்.
அந்த வழிமுறைகளின்படி காரியமாற்ற முற்படும்போது ''வெற்றிகளுக்கு வானமே எல்லை'' என்று கூறி, இந்த இளைஞர்களுக்கு ஆக்கமும் ஊக்கமும் உற்சாகமும் அங்கீகாரமும் அளிக்க வேண்டுமென ஊரின் எல்லா தரப்பு மக்களையும் வேண்டிக்கொள்கிறேன்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross