செய்தி: காயல்பட்டினத்தை அரசுப் பேருந்துகள் புறக்கணிப்பதைக் கண்டித்து “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் சார்பில் திருச்செந்தூரில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
ஆக.6.அனைவர்களையும் காண துடிக்கின்றோம்! posted byமுஹம்மது ஆதம் சுல்தான்! (yanbu)[04 August 2016] IP: 37.*.*.* Romania | Comment Reference Number: 44375
சகோதரர் ஜெய்னுலாப்தீன் அவர்கள் சொன்னது போல் இந்த "நடப்பது என்ன"வாட்ஸப் குழுமத்திற்கு எந்த தலைவரோ ,செயளாலரோ, பொருளாலரோ,எந்த நாட்டாமையோ கிடையாது.இதில் அடி முதல் முடிவரையுள்ள அத்துணை உறுப்பினர்களுக்கும் அனைத்து உரிமைகளையும் கொடுக்கின்ற வெளிப்படையான, வெட்ட வெளிச்சமான நிர்வாகத்தினால் எடுக்கபடக்கூடிய தீர்மானத்தின் அடிப்படையில் நமதூருக்கான நன்மைகளை செய்யக்கூடிய ஒரு செயல்வடிவ அமைப்பு!
இந்தியாவிலோ,அல்லது நம் தமிழ்நாட்டிலோ எங்குமே இப்படி ஒரு வெளிப்படை தன்மையான அமைப்பு அதன் ஊருக்காக உழைத்து பல நன்மைகளை ஈட்டியுள்ளதா என்றால் அது கேள்விக்குறியே?
ஒரு இணையதளத்தின் மூலம் உலகத்திலுள்ள அனைத்து நண்பர்களையும் இணைத்து அந்த இனைய தளத்தின் தொடர்பின் மூலமாக அந்த ஊர் மக்களுக்காக பல புண்ணிய காரியங்களை செய்வதற்குறிய கொள்கை முடிவை மேற்கொண்டு,அதை சாதித்தும் வருகிறது என்றால்,எப்படிப்பட்ட மாறுபட்ட சிந்தனைகள்,எப்படி மாத்தி யோசிக்கிறார்கள் எப்படிப்பட்ட ஒரு மகிமையின் வெளிப்பாடு,எப்படிப்பட்ட தொண்டுள்ள இதயங்களை ஈர்க்கின்றார்கள் இணைகின்றார்கள்!
இந்த "நடப்பது என்ன" வாட்ஸப் குழுமத்தைப்பற்றி நமதூர் சகோதரர்கள் மத்தியில் பிரதானமாக பேசுவதோடு மட்டுமல்ல, நம் பெண்டிலர்களின் கவனத்திற்கும் சென்று அவர்களும் இந்த அமைப்பைப்பற்றி அறியக்கூடிய ,தெரியக்கூடிய நிலைமைகள் நிலவி வருவதாக செய்திகள் வருகின்றன அல்ஹம்துலில்லாஹ்!
வெகுதூர ஊர்களிலிருந்து வரும் நமதூர் மக்களை நடுநிசியில் ஆறுமுகநேரியில் "அம்போ"வென்று இறக்கி விட்டு விட்டு அடைக்கலாபுரம் வழியாக தடம் மாறி தப்பித்து செல்லும் பேரூந்துகளைக்கண்டித்து நாளை மறுநாள் (ஆக.6-ந்தேதி) இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.இன்ஷா அல்லாஹ்!
பலமுறை மாவட்ட ஆட்சியாளரிடம் மனுகொடுத்தும் முழுமையான பலன் கிடைக்காத காரணத்தினால் இப்புண்ணிய போராட்டத்தில் குதித்துள்ளது இந்த "நடப்பது என்ன" வாட்ஸப் குழுமம்!
நமதூரின் மீதும்,நமதூர் மக்களின் இன்னல்கள் மீதும் உண்மையான அக்கறையுள்ள அனைத்து சகோதரர்களும் (அன்றைய தினம் தவிர்க்க முடியாமல் வர இயலாதவர்களைத்தவிர) மற்றைய சகோதரர்கள் ஒட்டுமொத்தமாக கலந்தது கொண்டு ,என்னால் இயன்ற நன்மையை இக்காயல் கண்மணிகளுக்காக செய்ய சித்தமாக இருக்கிறேன், நல்ல நோக்கத்தின் எதிரொலியாக திகழும் இந்த நல்ல காரியத்தை யார் முன்னெடுத்து சென்றாலும் சரிதான்!
அவர்களுடன் ஒத்துழைத்து ஒருங்கிணைபவனின் நானும் ஒருவன் என்று சொல்பவனே உண்மையான இவூரின் விசுவாசமிகு மண்ணின் மைந்தனாவான் என்பதே என்னுடைய எளிமைமிகு கருத்தாகும்! அப்படிப்பட்ட புண்ணியவான்கள் பூத்துக்குலுங்கும் கண்குளிர்ச்சியான குழுமத்தை ஆக 6-ந்தேதி
காண காத்திருக்கிறேன் இதே இணையதளத்தின் வாயிலாக வல்லோனின் உதவியுடன்.அல்லாஹ் அனைத்தும் அறிந்தவன்!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross