காயல்பட்டினம் வழித்தடத்தில் வந்து செல்ல வேண்டிய அரசுப் பேருந்துகள் அதைப் புறக்கணித்து மாற்றுப் பாதையில் செல்வதைக் கண்டித்து, தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர், போக்குவரத்துக் கழக மண்டல மேலாளர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டதன் அடிப்படையில், இதுவரை காணக்கிடைத்திராத பல பேருந்துகள் தற்போது காயல்பட்டினம் வழித்தடத்தில் வந்து செல்கின்றன.
என்றாலும், இன்றளவும் பல பேருந்துகள் காயல்பட்டினத்தைப் புறக்கணித்து மாற்றுப் பாதையில் செல்வதும் வாடிக்கையாகவே உள்ளது.
இதனைக் கண்டித்து, திருச்செந்தூர் பேருந்து நிலையம் அருகில், “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம், 06.08.2016. சனிக்கிழமையன்று காலை 11.00 மணியளவில் நடைபெறவுள்ளது.
இதில் பொதுமக்கள் அனைவரும் அவசியம் கலந்துகொள்ளுமாறு “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழும நிர்வாகிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
“நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
|