பன்னிரண்டாம் வகுப்பு அரசுப் பொதுத் தேர்வில், காயல்பட்டினம் நகரளவில் முதலிடங்களைப் பெறும் மாணவ-மாணவியருக்கு, ஹாங்காங்கிலுள்ள காயல் மாணவர் நலச் சங்கம் (Kayal Student Welfare Association - KSWA) அமைப்பின் சார்பில் ஆண்டுதோறும் பணப்பரிசுகளும், விருதுகளும் வழங்கப்படுவது வழமை. அதன்படி, கடந்த கல்வியாண்டில் முதலிடங்களைப் பெற்ற மாணவ-மாணவியருக்கு கஸ்வா சார்பில் பரிசுகளும், விருதுகளும் வழங்கப்பட்டுள்ளன. இதுகுறித்து, அவ்வமைப்பின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தியறிக்கை:-
நஹ்மதுஹு வனு ஸல்லி அலா ரசூளிஹில் கரீம்
நம் நகரளவில் பன்னிரண்டாம் வகுப்பு அரசுப் பொதுத்தேர்வில் முதலிடம் பெறும் மாணவருக்கு ஹாங்காங்கில் செயல்பட்டு வரும் காயல்பட்டினம் மாணவர் நல மன்றம் (கஸ்வா) அமைப்பின் சார்பில் அம்மன்றத்தின் நிறுவன உறுப்பினர் மர்ஹூம் கத்தீப் ஹாமித் நினைவாக 2002ம் ஆண்டு முதல் 15 ஆண்டுகளாக பணப்பரிசும் பாராட்டுக் கேடயமும் வழங்கப்பட்டு வருகிறது.
மற்றும் கடந்த 2 வருடங்களாக மருத்துவம் , மற்றும் பொறியியலுக்கான கட்ஆப் (Medical & Engineering Cut-off aggregate marks) மதிப்பெண், நமதூர் அளவில் முதல் இடம் பெறும் மாணவர்களுக்கு ஊக்க பரிசுத்தொகை வழங்கப்பட்டு வருகிறது.
மேலும் அதுபோல் பன்னிரண்டாம் வகுப்பு அரசுப் பொதுத்தேர்வில் நகரளவில் ஹாஃபிழுல் குர்ஆன் பட்டம் பெற்ற மாணவ மாணவியர்களில் அதிக மதிப்பெண் பெறுபவர்களுக்கு கஸ்வா அமைப்பின் சார்பாக அதன் உறுப்பினர் மர்ஹூம் ஹாஃபிழ் N.H. ஷாஹுல் ஹமீத் நினைவாக பணப்பரிசு வழங்கப்படுகிறது.
இந்த கல்வியாண்டில் (2015-2016) நடைபெற்ற பன்னிரண்டாம் வகுப்பு அரசுப் பொதுத் தேர்வில் முதலிடம் பெற்ற மாணவ-மாணவிக்கு பரிசுகளை வழங்கும் நிகழ்ச்சி இரண்டு கட்டமாக நடைப்பெற்றது.
மர்ஹூம் கத்தீப் ஹாமித் நினைவு பரிசு
இந்தாண்டு நம் ஊரிலேயே அதிக மதிப்பெண் L.K. மெட்ரிக் பள்ளியைச் சேர்ந்த S.A. முஹம்மது சாகியா என்ற மாணவி 1155 மதிப்பெண்களைப் பெற்று முதலிடத்தைப் பெற்றார். அவரை கவுரவிக்கும் வகையில் ரூபாய் 10 ஆயிரம் மற்றும் மர்ஹூம் கத்தீப் ஹாமித் நினைவு கேடயத்தை வழங்கி சிறப்பித்துள்ளது. இதை கஸ்வாவின் ஆலோசக உறுப்பினர் பல்லாக் H. ஹமீத் அப்துல் காதர் வழங்கினார்.
இந்த சிறப்பான நிகழ்ச்சி கடந்த 20.7.2016 புதன்கிழமை காலை L.K. மெட்ரிக் பள்ளியில் நடைபெற்ற மாணவியர்கள் ஒன்றுகூடல் (Assembly) நிகழ்ச்சியில் இந்நிகழ்வு இடம் பெற்றது. இப்பள்ளியின் முதல்வர் R. மீனா சேகர் தலைமை ஏற்று சிறப்பித்து தந்தார்.
இதில் கஸ்வாவின் உறுப்பினர்கள் ஹாபிழ் A.L. இர்ஷாத் அலி, U. இம்ரான் உஜைர், ஹாபிழ் M.N. முஹியத்தீன் ஆகியோர் கலந்து கொண்டார்கள். கஸ்வாவின் காயல் நகர பிரதிநிதி ஹாபிழ் M.I. யூசுப் ஸாஹிப் அவர்கள் அவ்வமைப்பை பற்றியும், நினைவு பரிசுகளை பற்றியும் மாணவிகள் மத்தியில் அழகிய முறையில் அறிமுக உரையாற்றினார்.
மர்ஹூம் ஹாபிழ் N.H. ஷாகுல் ஹமீத் நினைவு பரிசு
அதுபோன்று, 25-07-2015 திங்கள் கிழமை காலை 09.15 மணிக்கு, எல்.கே.மேனிலைப்பள்ளி வளாகத்தில் அப்பளியின் முதல்வர் சையத் அஹ்மத் அவர்களின் தலைமையில் மாணவர் ஒன்றுகூடலின் போது நடைபெற்றது.
2015-2016 கல்வியாண்டு பிளஸ்2-வில் தேர்வில், ஹாஃபிழுல் குர்ஆன் பட்டம் பெற்ற மாணவர்களில் முதல் இடம் பெற்ற எல் கே பள்ளியைச் சார்ந்த ஹாபிழ் K.M. முஹம்மத் அப்துர் ரசாக் அவர்களுக்கு மர்ஹூம் ஹாபிழ் N.H. ஷாகுல் ஹமீத் நினைவு பரிசாக ரூபாய் 3 ஆயிரம் ரொக்கமாக அவர்களுக்கு வழங்கப்பட்டது. அல்ஹாஜ் S.H.பாக்கர் சாஹிப் அவர்கள் இந்த பரிசை வழங்கினார்கள். ஹாபிழ் மாணவரின் சார்பாக அவருடைய தந்தை டூட்டி காஜா முஹ்யிதீன் பெற்று கொண்டார்.
இதில் ஒரு சிறப்பம்சம் என்னவென்றால் இதே ஹாபிழ் மாணவர்தான் பொறியியல் மற்றும் மருத்துவ பாடத்தில் (Engineering & Medical Cut-Off Marks) நம்மூரிலயே முதன்மை பெற்று இருப்பது குறிப்பிடதக்கது.
மருத்துவ பாடத்தில் அதிக கட்-டாப் (Medical Cut-Off) பெற்றதற்கு இந்த ஹாபிழ் மாணவர்க்கு அம்மன்றத்தின் ஆலோசக உறுப்பினர் பல்லாக் H. ஹமீத் அப்துல் காதர் அவர்கள் ரூபாய் 3 ஆயிரம் ஊக்க பரிசினை வழங்கினார்கள்..
அதே போல் பொறியியல் பாடத்திற்கான (Engineering Cut-Off) பரிசினை அந்த அமைப்பின் மற்றோர் ஆலோசக உறுப்பினர் P.M.I. அப்துல்லா ஜவ்ஹரி அவர்கள் ரூபாய் 3 ஆயிரத்தை ஊக்க பரிசாக வழங்கினார்கள்.
இதில் கஸ்வாவின் உறுப்பினர்கள் D. இஸ்மாயில், ஹாபில் A.L. இர்ஷாத் அலி, ஹாபில் M.N. முஹ்யத்தீன் மற்றும் காயல் பிரதிநிதி ஹாபில் M.I. யூசுப் ஸாஹிப் அவர்களும் கலந்து கொண்டார்கள். ஹாபில் M.I. யூசுப் ஸாஹிப் அவர்கள் இந்த பரிசுகளின் நோக்கங்கள், மர்ஹூம்கள் கத்தீப் ஹாமித் மற்றும் ஹாபில் சாகுல் ஹமீத் ஆகியோரின் நற்பண்புகளை பற்றி மாணவர்களிடையே சுருக்கமாக உரையாற்றினார்கள்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
Kayal Students Welfare Association - Hong Kong (KSWA)
T.S.T P.O. Box. 95361
Kowloon - Hong Kong
Email : info@kswa.org / kswa98@gmail.com
ஹாங்காங் கஸ்வா அமைப்பு சார்பில் கடந்த கல்வியாண்டில் (2015) ப்ளஸ் 2 முதன்மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்ட விபரங்களடங்கிய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
ஹாங்காங் கஸ்வா அமைப்பு தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
|