காயல்பட்டினம் வழியை அரசு பேருந்துகள் புறக்கணிப்பதை கண்டித்து கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் - ஆகஸ்ட் 6 சனிக்கிழமையன்று காலை 11 மணிக்கு நடைபெறவுள்ளது.
திருச்செந்தூர் பேருந்து நிலையம் அருகில் நடைபெறவுள்ள இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துக்கொள்ள விரும்புவோருக்கு சிறப்பு வேன்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இந்த வேன்கள் காயல்பட்டினம் பேருந்து நிலையத்தில் இருந்து 10 மணி முதல் இயக்கப்படும்.
வாகனங்கள் (பைக், கார்) வைத்துள்ள காயலர்கள் - இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துக்கொள்வது மட்டும் அல்லாமல் - தங்கள் நண்பர்களையும், வாகனத்தில் அழைத்து வர - ஆர்ப்பாட்டத்தை ஒருங்கிணைக்கும் நடப்பது என்ன? சமூக ஊடக குழுமம் கேட்டுக்கொண்டுள்ளது.
அவ்வாறு வாகனங்களை பிறருடன் பகிர்ந்துக்கொள்ள விரும்புவோருக்கு என தற்காலிக வாட்ஸஅப் குழுமம் [(AUG 6) CAR+BIKE POOLING] ஒன்று துவக்கப்பட்டுள்ளது. அதில் இணைய விரும்புவோர் தங்கள் மொபைல் எண்ணை - +91 7397 468 321 என்ற எண்ணுக்கு அனுப்பலாம்.
“நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross