பஹ்ரைன் நாட்டில் வசிக்கும் காயலர்களை ஒருங்கிணைத்து இயங்கி வரும் பஹ்ரைன் காயல் நல மன்றத்திற்கு (BAKWA) புதிய நிர்வாகிகள் ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். விரிவான விபரம் வருமாறு:-
பஹ்ரைன் காயல் நல மன்றத்தின் பொதுக்குழுக் கூட்டம், 09.07.2016. சனிக்கிழமையன்று 18.00 மணியளவில், பஹ்ரைன் E.T.A. BAFA FLAT HIDD எனுமிடத்தில் நடைபெற்றது.
மஹ்மூத் நெய்னா தலைமை தாங்கினார். ஹாஃபிழ் ராவன்னா முஹம்மத் ரிழ்வான் கிராஅத் ஓதி கூட்டத்தைத் துவக்கி வைத்தார். வேனா ஜாஹிர் ஹுஸைன் வரவேற்றுப் பேசினார்.
மன்றத்தின் செயல்பாட்டை மேம்படுத்தும் பொருட்டு, காயல்பட்டினம் ஷிஃபா, இக்ராஃ நிர்வாகங்களுக்கு முழு ஒத்துழைப்பளித்து செயல்படவும்,
காயல்பட்டினம் மக்களுக்கு சுகாதார விழிப்புணர்வை அதிகளவில் ஏற்படுத்தவும்,
கல்விக்கென தனிப்பட்ட முறையில் உதவித்தொகைகள் வழங்கவும் தீர்மானிக்கப்பட்டது.
மன்றத்தின் அடுத்த கூட்டத்தை, 02.09.2016. வெள்ளிக்கிழமையன்று 16.30 மணியளவில் நடத்திடவும் தீர்மானிக்கப்பட்டது.
கூட்டத்தில் பங்கேற்றோரின் விரிவான கருத்துப் பரிமாற்றங்களுக்குப் பின், பின்வருமாறு நிர்வாகிகள் ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர்:-
தலைவர்:
மஹ்மூத் நெய்னா
துணைத் தலைவர்:
நளீர் அஹ்மத்
செயலாளர்:
வேனா ஜாஹிர் ஹுஸைன்
துணைச் செயலாளர்
அத்தாஉல்லாஹ்
செயற்குழு உறுப்பினர்கள்:
கலீஃபா முஹம்மத் ஸதக்கத்துல்லாஹ்
முஹ்யித்தீன் பிக்தால்
அபூ முஹம்மத்
‘கவிமகன்’ காதர்
முஹம்மத் ஷம்சுத்தீன்
ஹாஃபிழ் ராவன்னா முஹம்மத் ரிழ்வான்
செய்யித் முஹ்யித்தீன் நன்றி கூற, துஆவுடன் கூட்டம் நிறைவுற்றது.
பஹ்ரைன் கா.ந.மன்றம் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
|