காயல்பட்டினம் வழியை அரசு பேருந்துகள் புறக்கணிப்பதை கண்டித்து ஆகஸ்ட் 6 அன்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், இப்பிரச்சனையை தமிழக முதல்வரின் நேரடி பார்வைக்கு கொண்டு செல்வதற்கான முயற்சி எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
இது குறித்து - நடப்பது என்ன? குழுமம் சார்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பு வருமாறு:
காயல்பட்டினம் வழியாக இயக்கப்பட வேண்டிய அரசு பேருந்துகள் - காயல்பட்டினத்தை பல ஆண்டுகளாக புறக்கணிப்பதை நாம் அறிவோம். இது குறித்து - ஜூன் மாதம் முதல் நடப்பது என்ன? குழுமம் சார்பாக சில நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட பிறகு - கூடுதலாக சில பேருந்துகள் வர துவங்கினாலும் - பல பேருந்துகள் தொடர்ந்து காயல்பட்டினத்தை புறக்கணித்து வருகின்றன.
இவ்விஷயத்தில் ஒரு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்ற அடிப்படையில் எடுக்கப்பட்டு வரும் முயற்சிகளில் - அடுத்த கட்டமாக - தமிழக முதல்வருக்கு மனு வழங்கும் முயற்சி - ஆகஸ்ட் 6 அன்று திருச்செந்தூர் பேருந்து நிலையத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் அறிவிக்கப்பட்டது.
அந்த மனு - தற்போது, Change.org என்ற உலக பிரசித்தி பெற்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில் - ஆகஸ்ட் 6 நடந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துக்கொண்டவர்கள், கலந்துக்கொள்ளாதவர்கள் என அனைவரும் - கையெழுத்திடுமாறு கேட்டு கொள்கிறோம்.
பெருவாரியான கையெழுத்துகள் பெற்ற பின், முதல்வரின் நேரடி பார்வைக்கு நம் மனு செல்வதற்கான முயற்சிகளை - நடப்பது என்ன? குழுமம் செய்யும் என்பதனை தெரிவித்து கொள்கிறோம்.
எனவே - கீழ்க்காணும் இணைப்பு மூலம், அந்த மனுவில் கையெழுத்திடும்படி தங்களை கேட்டு கொள்கிறோம்.
https://goo.gl/9hprJl
இவ்வாறு அச்செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |