விரைவில் நடைபெறவுள்ள தமிழக உள்ளாட்சித் தேர்தலில், காயல்பட்டினம் நகர்மன்றத்தின் பொறுப்பிடங்களுக்குப் போட்டியிடவும், நகர்மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டும் நிலுவையிலுள்ள பணிகளை விரைந்து செய்து முடிக்க - காயல்பட்டினம் நகராட்சி ஆணையரை வலியுறுத்தவும், சோஷியல் டெமாக்ரட்டிக் பார்ட்டி ஆஃப் இந்தியா - SDPI கட்சியின் காயல்பட்டினம் நகர கிளை கலந்தாலோசனைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டள்ளது.
இதுகுறித்து, அக்கட்சியின் திருச்செந்தூர் சட்டமன்றத் தொகுதி தலைவர் எஸ்.அப்துல் ரஹ்மான் வெளியிட்டுள்ள அறிக்கை:-
SDPI கட்சியின் காயல்பட்டினம் நகர கிளைக் கூட்டம் சென்ற வாரம் நடைபெற்றது. இதில் கீழ்காணும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
1) எதிர்வரும் உள்ளாட்சி தேர்தல் சம்பந்தமாக அனைத்து ஜமாத்துகள் / சங்கங்களை சந்திப்பது.
2) உள்ளாட்சி தேர்தலில் SDPI போட்டியிடுவது என்றும்
3) நகர்மன்றத்தில் நிறைவேற்றப்பட்ட பல்வேறு மக்கள் நல தீர்மானங்களை உடனடியாக நிறைவேற்ற ஆணையரை வலியுறுத்த வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக SDPI கட்சியின் காயல்பட்டினம் நகர கிளையின் சார்பாக அனைத்து ஜமாத்துகள், சங்கங்களை சந்திப்பது என தீர்மானத்தின் அடிப்படையில் தற்போது நகரிலுள்ள ஜமாத்துகள் சந்திப்பு நடைபெற்று வருகிறது.
இன்னும் பல்வேறு ஜமாத்துக்கள், சங்கங்கள் , சமூக ஆர்வலர்களை சந்தித்து பொதுமக்களின் பேராதரவோடு SDPI கட்சி உள்ளாட்சி தேர்தலை இறைவன் நாடினால் சந்திக்கும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
SDPI / PFI தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
|